Flipkart Independence Day Sale 2025: Flipkart நிறுவனம் தற்போது தனது Independence Day Sale 2025 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா ஷாப்பிங் நிகழ்வனது நாளை அதாவது ஆகஸ்ட் 13, 2025 முதல் ஆகஸ்ட் 17, 2025 வரை தொடரும். இந்த 5 நாள் விற்பனையில், மின்னணு பொருட்கள், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பிரிவுகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். மேலும் இந்த மெகா விற்பனைக்கு சுதந்திர தின விற்பனை என்று பெயரிப்பாட்டுள்ளது, அதனுடன் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 பேனரில் இது எழுதப்பட்டுள்ளது.
Flipkart விற்பனையில் என்னென்ன கிடைக்கும்?
இந்த விற்பனையில் வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி இந்த முறை, Samsung, Motorola, Vivo, Asus, HP, TCL போன்ற முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் மெகா தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபேஷன் பிரிவில் பாரம்பரிய, சாதாரண உடைகளுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் சமையலறை பிரிவில் பர்னிச்சர், சமையலறை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கும் நல்ல சலுகைகள் கொடுக்கப்படும். கடிகாரங்கள், சன்கிளாஸ்கள் மற்றும் நகைகள் போன்ற ஆபரணங்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.
சிறந்த சலுகைகளை எவ்வாறு பெறுவது?
1. வங்கி தள்ளுபடி – கனரா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
2. கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் – வங்கி தள்ளுபடியுடன் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை இணைப்பதன் மூலம் அதிகமாக சேமிக்கலாம்.
3. பண்டில் டீல்கள் – ஃப்ளிப்கார்ட் பிளஸ் சூப்பர் காயின்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறுங்கள்.
4. ஆரம்ப அணுகல் – நீங்கள் ஃப்ளிப்கார்ட் பிளஸ் அல்லது விஐபி உறுப்பினராக இருந்தால், நீங்கள் ஆரம்பகால சலுகைகளைப் பெறலாம்.
விற்பனைக் காலக்கெடு
• தொடக்க தேதி – புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2025
• முடிவு தேதி – திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2025
எந்தெந்தப் பிரிவுகளில் என்ன கிடைக்கும்?
• மின்னணு சாதனங்கள் – சாம்சங், மோட்டோரோலா, விவோ, ஆசஸ், ஹெச்பி, டிசிஎல் ஆகியவற்றில் மிகப்பெரிய தள்ளுபடிகள்.
• ஃபேஷன் & வாழ்க்கை முறை – பாரம்பரிய, பார்மல், காஸ்வல் உடைகளில் பெரிய விலைக் குறைப்பு.
• வீடு & சமையலறை – பர்னிச்சர், சமையலறை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கான சலுகைகள்.
• துணைக்கருவிகள் – கடிகாரங்கள், சன்கிளாஸ்கள் மற்றும் நகைகளுக்கான சலுகைகள்.