கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

பிரசத்தி பெற்ற யமஹா நிறுவனத்தின் ஸ்டீரிட் ஃபைட்டர் MT-15 V2 மாடலுக்கு சவாலாக வந்துள்ள புதிய 160 டியூக் பைக்கின் எஞ்சின், பவர் உட்பட அனைத்து முக்கிய விபரங்கள் மற்றும் விலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

நல்ல வரவேற்பினை 160சிசி சந்தையில் பெற்றுள்ள எம்டி-15 தவிர மற்ற மாடல்களான அப்பாச்சி 160, சுசூகி ஜிக்ஸர் 155, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 மற்றும் பல்சர் 160 போன்றவை இருந்தாலும், டியூக் 160 நேரடியாக எம்டி15க்கு சவால் விடுக்கின்றது.

KTM 160 Duke Vs Yamaha MT-15 V2 எஞ்சின் ஒப்பீடு

ஆர்15 மற்றும் எம்டி-15 பற்றி நமக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

KTM 160 Duke Yamaha MT-15 V2
எஞ்சின் (Engine) 164.2cc ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு 155cc ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு
பவர் (Power) 19 hp @ 9,500 rpm 18.4 hp @ 10,000 rpm
டார்க் (Torque) 15.5 Nm @ 7,500 rpm 14.1 Nm @ 7,500 rpm
கியர்பாக்ஸ் 6  ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் 6  ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச்
Power-to-weight Ratio 129.2 hp/tonne 130.4 hp/tonne

0.6hp மற்றும் 1.4Nm கூடுதல் பவரை வெளிப்படுத்தும் டியூக் 160க்கு பலமாக இருந்தாலும் எடை 147 கிலோ கிராம் ஆக உள்ளது. எம்டி-15 எடை 141 கிலோ கிராம் ஆகும். மற்றபடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.


கேடிஎம் 160 டியூக் , யமஹா MT-15 V2

மற்ற மெக்கானிக்கல் வசதிகள்

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சஸ்பென்ஷன் அமைப்பு உட்பட பிரேக்கிங் என அனைத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கேடிஎம் 160 டியூக் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் உள்ளது.

எம்டி-15 டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உட்பட எல்சிடி டிஸ்பிளே அல்லது 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டர் என இரு ஆப்ஷனை பெற்றுள்ளது.

KTM 160 Duke Yamaha MT-15 V2
எடை (Kerb Weight) 147 கிலோ 141 கிலோ
சீட் உயரம் 815 மிமீ 810 மிமீ
தரைத்தூக்கம் 174 மிமீ 170 மிமீ
எரிபொருள் தொட்டி திறன் 10.1 லிட்டர் 10 லிட்டர்
வீல் பேஸ் 1,357 மிமீ 1,325 மிமீ
முன் சஸ்பென்ஷன் USD ஃபோர்க் USD ஃபோர்க்
பின் சஸ்பென்ஷன் மோனோஷாக் மோனோஷாக்
பிரேக் (முன் / பின்) 320 மிமீ டிஸ்க் / 230 மிமீ டிஸ்க் 282 மிமீ டிஸ்க் / 220 மிமீ டிஸ்க்
டயர் (முன் / பின்) 110/70-17 – 140/60-17 100/80-17 – 140/70R-17
கிளஸ்ட்டர் LCD டாஷ், ப்ளூடூத் இணைப்பு DLX: 4.2″ TFT டாஷ், STD: LCD டாஷ்
லைட்டிங் முழு LED விளக்கு முழு LED ப்ரொஜெக்டர்
ABS இரட்டை சேனல் ABS (பின் சக்கரம் Supermoto முறையில் ஆஃப் செய்யலாம்) இரட்டை சேனல் ABS

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 விலை ஒப்பீடு

குறிப்பாக ரூ.1.85 லட்சத்தில் துவங்கும் கேடிஎம் 160 டியூக்கை விட ரூ.15,000 வரை விலை குறைவாக துவங்குகின்ற யமஹா எம்டி-15 விலை ரூபாய் 1.71 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை அமைந்துள்ளது.

விலை Ex-showroom on-road price
KTM 160 Duke ₹ 1.85 லட்சம் ₹ 2,.23 லட்சம்
Yamaha MT-15 V2 ₹ 1.71 லட்சம்- 1.85 லட்சம் ₹ 2.09 லட்சம் – ₹ 2.17 லட்சம்

தமிழ்நாடு ஆன்-ரோடு விலை இணைக்கப்பட்டுள்ளது.

விலை, எஞ்சின் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் ஒப்பீடு செய்து பார்க்கையில் இப்பொழுதும் 160 டியூக்கை விட எம்டி-15 வி2 சிறந்த தேர்வாக எனக்கு தெரிகின்றது.


கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 bikeகேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 bike

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.