Flipkart Independence Day Sale 2025: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025 ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த விற்பனை புதன்கிழமை, ஆகஸ்ட் 13 முதல் தொடங்கி திங்கள், ஆகஸ்ட் 17 வரை நடைபெறும்.
பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025
இந்த ஐந்து நாள் விற்பனையில், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகளைப் பெறுவார்கள். Samsung, Motorola, Vivo, Asus, HP, TCL போன்ற பிராண்டுகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படும் என நிறுவனத்தின் டீஸரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flipkart Independence Day Sale 2025: கனரா வங்கி அட்டைதாரர்களுக்கு சிறப்புச் சலுகை
– ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், கனரா வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
– இது தவிர, கேஷ்பேக் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
– இது வங்கி சலுகையுடன் கூடுதலாக இருக்கும்.
– வாடிக்கையாளர்கள் விலையுயர்ந்த கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலையில் வாங்க இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும்.
ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பிரிவுகளிலும் அதிக தள்ளுபடிகள்
எலக்ட்ரானிக்ஸ் தவிர, இந்த விற்பனையில் கேஷுவல், பாரம்பரிய மற்றும் ஃபார்மல் ஆடைகள், தளபாடங்கள், சமையலறை அத்தியாவசியப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், சன்கிளாஸ்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றில் பிளிப்கார்ட் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்கை வழங்க உள்ளது. இதன் மூலம், அனைத்து வயது மற்றும் தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க முடியும்.
விற்பனையின் பெயரால் குழப்பம்
சுவாரஸ்யமாக, பிளிப்கார்ட்டின் லேண்டிங் பேஜ் மற்றும் URL இதை Flipkart Independence Day Sale 2025 என்று அழைக்கின்றன. அதே நேரத்தில் பேனரில் Flipkart Freedom Sale 2025 என எழுதப்படுகின்றது. உண்மையில், நிறுவனம் சமீபத்தில் ஃப்ரீடம் சேல் 2025 ஐ ஏற்பாடு செய்திருந்தது. இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. சுதந்திர தின விற்பனை அதே ஃப்ரீடம் சேலின் நீட்டிப்பு என்று நம்பப்படுகிறது.
ஃப்ரீடம் சேலின் போது கிடைத்த அட்டகாசமான சலுகைகள்
கடந்த ஃப்ரீடம் சேலில், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு 78 ‘ஃப்ரீடம் டீல்ஸ்’ மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 15% உடனடி தள்ளுபடியை வழங்கியது. ஃபிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் காயின் மூலம் கூடுதலாக 10% தள்ளுபடி கிடைத்தது. சுதந்திர தின விற்பனையான Flipkart Independence Day Sale 2025 -யிலும் இதே போன்ற பிரத்யேக சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
Sripriya Sambathkumar
நாட்டின் மீது பற்று, தமிழின் மீது தாகம், இலக்கியத்தில் ஆர்வம், எழுதுவதில் நாட்டம், புத்தகங்கள் மீது பித்து, புதுமையில் விருப்பம், பழமையுடன் நெருக்கம், இசையின் மீது ஈர்ப்பு, பலவித ரசனைகளின் ரசிகை!!
…Read More