கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்கள், தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 350-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை இன்று (ஆக.14) காலையில் முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு ரூ.240 என்ற அளவில் குறைந்த சம்பளமே வழங்குகிறார்கள் எனவும் அதையும் முறையாக வழங்காமல் அடிமை போல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தாங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கேட்டால் அவதூறாக திட்டுவதாகவும், சம்பளம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அனைத்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.