குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வி​யா, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 1983-ம் ஆண்​டு​தான் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெற்​றுள்​ளார். அதற்கு 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்​பெற்​றது. அப்​போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது. அதன்​பின்​னர் கடந்த 1982-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியலில் இருந்து சோனியா காந்தி பெயர் நீக்​கப்​பட்​டது. இது வாக்​காளர் சட்​டப்​படி அப்​பட்​ட​மான விதி​மீறல் இல்​லை​யா? அதன்​பின் மீண்​டும் 1983-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியலில் சோனியா பெயர் சேர்க்​கப்​பட்​டது.

தகு​தி​யற்ற மற்​றும் சட்​ட​விரோத வாக்​காளர்​களை முறைப்​படுத்த வேண்​டும் என்று ராகுல் காந்தி இப்​போது ஆர்​வம் காட்​டு​கிறாரே, அப்​படி​யா​னால், சோனியா காந்​தி​யின் விதி​மீறல் குறித்து அவர் விளக்​கம் அளிக்க வேண்​டும்.

புதுடெல்லி மக்​களவை தொகு​தி​யில் கடந்த 1980-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை கடைசி நாளாக கணக்​கிட்டு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அப்​போது வரை சோனியா காந்தி இத்​தாலி குடி​யுரிமை​யைத்​தான் வைத்​திருந்​தார். அப்​போது இந்​திரா காந்தி பிரதம​ராக இருந்​தார். அவரது அதி​காரப்​பூர்வ அரசு இல்​ல​மான எண் 1, சப்​தர்​ஜங் சாலை, டெல்லி முகவரி அளிக்​கப்​பட்டு இந்​திரா காந்​தி, ராஜீவ் காந்​தி, சஞ்​சய் காந்​தி, மேனகா காந்தி ஆகியோர் பெயர்​களு​டன் சோனியா காந்​தி​யின் பெயரை​யும் வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​துள்​ளனர். அதன்​படி சோனி​யா​வின் வாக்​காளர் வரிசை எண் 388, வாக்​குச் சாவடி எண் 145 ஆக பதி​வாகி உள்​ளது.

இத்​தாலி குடி​யுரிமை பெற்ற சோனி​யா, இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்பே இந்​திய வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது சட்​டத்தை மீறிய செயல் என்​பது மிகத் தெளி​வாக தெரி​கிறது.

ராஜீவ் காந்​தியை திரு​மணம் செய்த பிறகு இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு 15 ஆண்​டு​கள் சோனியா காந்தி காத்​திருந்​தது ஏன்? இது வெளிப்​படை​யான வாக்​காளர் சட்​டத்தை மீறு​வதல்​லாமல், வேறு என்ன? இவ்​வாறு அமித் மாள​வியா கூறி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.