இந்தியாவின் ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற ஏதெர் எனர்ஜி தமிழ்நாட்டில் சுமார் 38 நகரங்களில் 430 விரைவு ஏதெர் க்ரீட் சார்ஜிங் நெட்வொர்க்கினை கொண்டுள்ளது.
ஏதெர் எனர்ஜி தற்போது தமிழ்நாட்டில் 35 நகரங்களில் 44 மையங்களையும், 42 சேவை மையங்களையும் இயக்கி வருகிறது, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறது.
கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், குன்னூர் மற்றும் ஏலகிரி உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பு பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த சார்ஜர்களின் இருப்பிடத்தை கொண்டு பின்வரும் நகரங்களுக்கு இலகுவான பயணத்தை மேற்க் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. கோயம்புத்தூர்-பெங்களூர், மதுரை-கன்னியாகுமரி, கோயம்புத்தூர்-பழனி, திருச்சி-சென்னை மற்றும் சென்னை-பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களை ஆதரிக்கிறது, இதன் மூலம் மின்சார வாகன பயனர்களுக்கு நீண்ட தூர பயணத்தை எளிதாக்குகிறது.
ஏதர் கிரிட் நெட்வொர்க்குடன் இணைந்து, நிறுவனம் லைட் எலக்ட்ரிக் ஒருங்கிணைந்த சார்ஜிங் சிஸ்டம் (LECCS) மூலம் 50 மைங்களை தமிழ்நாட்டில் பெற்றுள்ளதால் இதில் ஏதெர் மட்டுமல்லாமல் மற்ற இலகுரக வாகனங்களையும் சார்ஜ் செய்ய இயலும், கூடுதலாக காபி டே குளோபல் லிமிடெட், ஜியோன் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட், கங்கா ஸ்வீட்ஸ் மற்றும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் போன்றவற்றில் உள்ள சார்ஜிங் மையங்களையும் அனுகலாம் என ஏதெர் தெரிவித்துள்ளது.
ஏதெர் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாமல், ஹீரோ நிறுவனத்தின் விடா மின் ஸ்கூட்டர்களையும் ஏதெர் க்ரீடில் சார்ஜ் செய்ய முடியும்.
ஏதர் எனர்ஜி நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் இரு சக்கர வாகனங்களுக்கான வேகமான சார்ஜிங் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர் நாட்டின் மிகப்பெரிய பிரத்யேக மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தேசிய அளவில், நிறுவனம் இப்போது 3,300க்கும் மேற்பட்ட ஏதர் கிரிட் வேகமான சார்ஜிங் புள்ளிகளை இயக்குகிறது. தினசரி பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கான செயலிழப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட சார்ஜர்கள் 10 நிமிடங்களில் 15 கிலோமீட்டர் வரை சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கின்றன.