ரூ.1.94 லட்சத்தில் 2026 கவாஸாகி KLX230, KLX230R S ஆஃப் ரோடு பிரியர்களுக்கு அறிமுகம்

Kawasaki 2026 KLX230

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ரூ.1,94,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் MY26 கவாஸாகி KLX230R S மற்றும் KLX230 ரூ.1.99 லட்சம் விலையில் டூயல் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் முன்பாக கிடைக்கின்ற KLX230 மாடலை விட குறைவான விலையிலும், அதே நேரத்தில் சில நுட்பங்களில் மாறுபாடுகளை பெற்றுள்ளது.

ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான டூயல் ஸ்போர்ட் மாடல் ஆனது முன்புறத்தில் 220 மிமீ பயணக்கின்ற வகையிலான 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 223 மிமீ பயணத்துக்கு ஏற்ற யூனி-டிராக்  மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

ஆனால் பிரீமியம் விலையில் ரூ.3.30 லட்சத்தில் கிடைத்த KLX230 மாடலின் சஸ்பென்ஷன் இருபக்கத்திலும் 250 மிமீ பயணிப்பதுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாகவும் அமைந்திருந்தது.

233cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

129 கிலோ எடையுடன் KLX 230RS மாடல் 270 மிமீ தரை இடைவெளி மற்றும் 900 மிமீ இருக்கை உயரத்துடன் உள்ளது.

KLX 230 மாடல் 255 மிமீ தரை இடைவெளி மற்றும் 880 மிமீ இருக்கை உயரத்துடன் 139 கிலோ எடை கொண்டுள்ளது.

பொதுவாக இரு மாடலும் 21 அங்குல டயரில் 265 மிமீ டிஸ்க், பின்புறத்தில் 18 அங்குல டயருடன் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.


kawasaki klx 230r s
Kawasaki 2026 KLX230R S

கேஎல்எக்ஸ் 230  பச்சை மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்றுள்ளது. கேஎல்எக்ஸ் 230 ஆர்எஸ் மாடல் பச்சை நிறத்தில் மட்டும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த மாடல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிற்கு தற்பொழுது கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.