விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை: தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் தேசிய, சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டிகளில் கலந்து கொள்​வதற்​காக​வும், பயிற்சி உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் ரூ.23.40 லட்​சம் நிதி​யுத​வியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார்.

தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை சார்​பில் நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வருகிறது. அதன் ஒரு பகு​தி​யாக கேலோ இந்​தியா இளை​யோர் மும்​முறை தாண்​டு​தல் விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப்​ப​தக்​கம் வென்ற எஸ்​.ர​விபிர​காஷுக்கு தடகள விளை​யாட்டு உபகரணம் வாங்​கு​வதற்​காக ரூ.1 லட்​சத்​துக்​கான நிதி​யுத​வியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று முன்​தினம் வழங்​கி​னார்.

அப்​போது 39-வது தேசிய ஜூனியர் தடகளப்​ போட்​டி​யில் வெண்​கலப்​ ப​தக்​கம் வென்ற ஜே.கோகுல் பாண்​டியனுக்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்​கு​வதற்​காக ரூ.70 ஆயிரம், மாநில, தேசிய அளவி​லான பாரா தடகளப்​போட்​டிகளில் தங்​கப்​ ப​தக்​கம் வென்ற லோகேஷுக்கு உயர்ரக பாரா தடகள உபகரணம் வாங்​கு​வதற்​காக ரூ.7.20 லட்​சம், சர்​வ​தேச பாரா டேபிள் டென்​னிஸ் போட்டி​யில் பங்​கேற்​ப​தற்​காக தேசிய பாரா டேபிள் டென்​னிஸ் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் வென்ற ஆர்​.தீபிகா ராணி ராமநாதன், வெள்ளி பதக்​கம் வென்ற டி.சர​வணகு​மார், கேலோ இந்​தியா பாரா விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப்​ப​தக்​கம் வென்ற ஜி.அ​வி​நாஷ் ஆகியோ​ருக்கு தலா ரூ.1.50 லட்​சம் என 6 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.13.40 லட்சத்​துக்​கான காசோலைகளை​யும் வழங்​கி​னார்.

பின்​னர் 23-வது ஆசிய மாஸ்​டர்ஸ் தடகள சாம்​பியன்​ஷிப் – 2025 போட்​டியை நடத்​த மாஸ்​டர்ஸ் அத்​லெடிக்ஸ் அமைப்புக்கு ரூ.10 லட்சத்​துக்​கான காசோலையை துணை முதல்​வர் வழங்​கி​னார். இந்​நிகழ்​வில் விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.