2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள யமஹாவின் ரே ZR 125 Fi மற்றும் ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி என இரண்டிலும் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு ரூ.80,620 முதல் ரூ.92,990 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் 125 என இரண்டும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ளது, ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து  பவர் அசிஸ்ட் வசதி, சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 125cc எஞ்சின் அதிகபட்சமாக 6500rpm-ல் 8.2ps பவர் மற்றும் 10.3Nm டார்க் 5000rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

Yamaha RayZR 125 Fi ஹைப்ரிடில்  சில்வர் ஒயிட் காக்டெயில் நிறத்திலும், அதே நேரத்தில் முரட்டுத்தனமான ஸ்ட்ரீட் ரேலி வேரியண்டில் மேட் கிரே மெட்டாலிக் பூச்சுடன் வழங்கப்படுகிறது.

பயண தூரம், பேட்டரி திறன், சராசரி வேகம், கடைசியாக நிறுத்தப்பட்ட இடம் மற்றும் மால்ஃபங்க்‌ஷன் அறிவிப்பு போன்றவற்றுடன் கூடுதலாக சவாரி தகவல்களைப் பெற உங்கள் தொலைபேசியில் Y-Connect செயலியைப் பயன்படுத்தவும்.

  • RayZR 125 Fi Hybrid – ₹ 80,620
  • RayZR 125 Fi Hybrid Disc – ₹ 87,810- ₹ 88,810
  • RayZR Street Rally 125 Fi Hybrid – ₹ 92,990

21 லிட்டர் பூட் கொள்ளளவு பெற்று டிரம் அல்லது டிஸ்க் என முன்பக்க பிரேக் வசதியுடன் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் ஒற்றை யூனிட் ஸ்விங் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது.

2025 yamaha rayzr 125 fi hybrid

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.