iphone 15 Discount: மற்றவர்களின் கைகளில் ஐபோன் 15 இருப்பதைப் பார்த்து நீங்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம், பணம் பற்றாக்குறையால், இந்த ஐபோன் 15 ஐ வாங்க முடியாமல் போகலாம். இப்போது நீங்கள் கவலைப் பட தேவையில்லை. ஏனென்றால் இப்போது நீங்கள் ஐபோன் 15 ஐ மலிவான விலையில் வாங்கலாம். இதற்கு நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ஐபோன் 15 (128 ஜிபி, கருப்பு) விலை ரூ.79,900 ஆகும். ஆனால் ஷாப்பிங் செயலியான அமேசானில், இந்த போனை 12% தள்ளுபடியில் வாங்கலாம். தள்ளுபடிக்குப் பிறகு, ஐபோன் 15 இன் விலை ரூ.61,400க்கு வாங்கலாம். இது தவிர, அமேசானில் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். உங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஐபோன் 14 இருந்தால், இந்த போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.25,550 பெரிய தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு ஐபோன் 15க்கு ரூ.35,850 மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.
உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி மற்றும் அமேசான் பேயின் கிரெடிட் கார்டு இருந்தால், இந்த கார்டில் சுமார் ரூ.3,070 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதாவது இப்போது ஐபோன் 15 (128 ஜிபி, கருப்பு) க்கு நீங்கள் பாக்கெட்டிலிருந்து ரூ.32,780 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் போனை வாங்குவதற்கு முன், நீங்கள் அனைத்து சலுகைகளையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும். ஏனெனில் ஷாப்பிங் பயன்பாட்டில் சலுகைகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15 இன் அம்சங்கள்
டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பு – iPhone 15 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆப்பிள் முந்தைய மாடல்களைப் போலவே அதே வடிவமைப்பை இதிலும் காண முடிகின்றது. ஆனால் இது ஒரு டைனமிக் ஐலேண்ட் நாட்ச்சைக் கொண்டுள்ளது, இது iPhone 14 Pro மாடல்களில் நன்கு விரும்பப்பட்டது.
கேமரா அப்கிரேட் – இந்த மாடலில் 48-மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது பகல் வெளிச்சம், குறைந்த ஒளி மற்றும் போட்ரெய்ட் போட்டோகிராபியில் பெரிய அளவிலான மேம்பாடுகளை அளிக்கின்றது.
பிராசசர் – இது ஆப்பிளின் A16 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. இது iPhone 14 மற்றும் iPhone 14 Plus இல் பயன்படுத்தப்படும் A15 சிப்பை விட சிறந்தது.
சார்ஜிங் போர்ட் – ஐபோன் 15 இல் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது தனிச்சிறப்பு வாய்ந்தது. இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட லைட்னிங் போர்ட்டை மாற்றியுள்ளது.
About the Author
Vijaya Lakshmi