சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார். கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இந்த பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.

இதை நினை​வு​கூரும் வகை​யில் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர்.

எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி புதிய சாதனை​களை படைத்​தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்​பினையை கற்​றுத் தரு​கிறது. நாம் சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும். இதன்​மூலமே நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்த முடி​யும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரி​வினை​யின்​போது ஏராள​மானோர் உயி​ரிழந்​தனர். அவர்​களை இப்​போது நினை​வு​கூர்​கிறேன். பிரி​வினைக்​கும் அதன்​பிறகு ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களுக்​கும் காங்​கிரஸ் கட்​சியே காரணம். வரலாற்​றில் இந்த நாளை மறக்​கவே முடி​யாது” என்று தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.