ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக தீடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 46-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. இது​வரை​யில் மீட்​கப்​பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.

மீட்பு பணி​களில் என்​டிஆர்​எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, ராணுவம், உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர். நிலைமை மோச​மாக இருப்​ப​தால் என்​டிஆர்​எப்​-ன் இரண்டு புதிய குழுக்​கள் உட்பட மீட்பு பணி​யாளர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மச்​சைல் மாதா கோ​யிலுக்கு செல்​லும் வழி​யில் அமைந்​துள்ள சோசிட்டி கிராமத்​தில் மதி​யம் 12 மணி முதல் 1 மணிக்​குள் இந்த பேரழிவு நிகழ்ந்​தது. ஜூலை 25-ம் தேதி தொடங்​கிய வரு​டாந்​திர மச்​சைல் மாதா யாத்​திரை செப்​டம்​பர் 5-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. இதற்​காக அங்கு ஏராள​மான மக்​கள் கூடி​யிருந்​த​போது இந்த சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

9,500 அடி உயரத்​தில் அமைந்​துள்ள இந்த ஆலயத்​துக்​கான 8.5 கிலோமீட்​டர் பாத​யாத்​திரை சோசிட்டி கிராமத்​தில் இருந்தே தொடங்​கு​கிறது. இந்த கிராமம் கிஷ்த்​வார் நகரத்​திலிருந்து சுமார் 90 கிலோமீட்​டர் தொலை​வில் அமைந்​துள்​ளது. இங்கு பக்​தர்​களுக்​காக அமைக்​கப்​பட்ட சமூக சமையலறை (லங்​கர்) மேகவெடிப்​பால் பெரிதும் பாதிப்​படைந்​தது. திடீர் வெள்​ளம் காரண​மாக கடைகள் மற்​றும் பாது​காப்பு புறக்​காவல் நிலை​யம் உட்பட பல கட்​டமைப்​பு​கள் நீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

பேரிடர் ஏற்​பட்ட உடன் கிஷ்த்​வார் துணை ஆணை​யர் பங்​கஜ் குமார் சர்​மா, மூத்த காவல்​துறை கண்​காணிப்​பாள​ருடன் இணைந்து மீட்பு நடவடிக்​கைகளை துரிதப்​படுத்​தி​னார். இந்த மேகவெடிப்பு சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஜம்​மு-​காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்​கல் தெரி​வித்​துள்​ளதுடன், மீட்பு மற்​றும் நிவாரண நடவடிக்​கைகளை துரிதப்​படுத்த அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்​லா, கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் தொலை​தூர கிராமத்​தில் பெரும் ​மேக வெடிப்​பால் ஏற்​பட்​டுள்ள நிலைமை குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவிடம்​ விளக்​கி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.