பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார்.

இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கைகள் மற்​றும் ஒரு காலில் முறிவு ஏற்​பட்டு படு​கா​யம் அடைந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணை​யர் டி.சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடந்​தது.

இதில், சக பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு கூறியபடி அவரது 2 முன்​னாள் மாணவர்​கள் தாக்​குதல் நடத்​தி​யது தெரிய வந்​தது. அதற்​காக, உள்​ளூர் ரவுடிகள் 4 பேருக்கு அந்த மாணவர்​கள் பணம் கொடுத்​ததும் அம்​பல​மானது. இதையடுத்து முன்​னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். தலைமறை​வான பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு, முன்​னாள் மாணவர் காசீம் பாபு உட்பட 4 பேர் தலைமறை​வாகி விட்​டனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ​ரான துணை ஆணை​யர் சரவணன் கூறும்​போது, “இந்த தாக்​குதல் கொலை செய்​யும் நோக்​கில் நடத்​தப்​பட​வில்​லை. மாறாக காயப்​படுத்தி மருத்​துவ விடுப்பு எடுக்க வைப்​ப​தற்​காக நடத்​தப்​பட்​டுள்​ளது. ராமச்​சந்​திரமூர்த்தி விடுப்பு எடுத்​தால் வெங்​கடேஸ்​வரலு தொடர்ந்து தலை​வ​ராக நீடிக்​கலாம். இதற்​காக தனது முன்​னாள் மாணவர்​களை ஆந்​தி​ரா​வில் இருந்து விமானத்​தில் வரு​வதற்​கும் ரவுடிகளுக்கு கொடுக்​க​வும் ரூ.49 ஆயித்தை வழங்கி உள்​ளார். விரை​வில் இதர 4 குற்​ற​வாளி​களை​யும் கைது செய்​வோம்” என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.