மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

பாக்ஸ் வடிவ டிசைனை பின்பற்றி ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக மஹிந்திரா Vision S மிகவும் முரட்டுத்தனமாக அமைந்துள்ள மாடல் விற்பனைக்கு 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஷன் எஸ் மாடலின் அடிப்படையிலான டிசைனை நேரடியாக ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ என் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

Mahindra’s NU_IQ பிளாட்ஃபாரத்தின் மோனோக்யூ சேஸிஸ் பெற்ற இந்த மாடல் EV , ICE என இரண்டிலும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தோற்றத்தில் முன்புறம் ட்வின் பீக்ஸ் லோகோ, இருபக்கமும் செங்குத்தான முறையில் உள்ள எல்இடி விளகுக்களுடன் L-வடிவ ஹெட்லைட்க பெற்றுள்ள பம்பரில் பிக்சல் வடிவ மூடுபனி விளக்குகள் உள்ளது.

ஃப்ளஷ்-வகை கதவு கைப்பிடிகள் மற்றும் வழக்கமான கண்ணாடிகளுக்கு பதிலாக கேமரா அடிப்படையிலான வெளிப்புற பின்புறக் காட்சி கண்ணாடிகள் (ORVM), 19 அங்குல புதிய டிசைனை பெற்ற அலாய் வீல், உயரமான வீல் ஆர்ச் மற்றும் கிளாடிங், மேற்கூறைக்கு செல்ல படிகள் உள்ளது.


mahindra vision s concept dashboard

பின்புறத்தில் ஸ்பேர் வீல் வழங்கப்பட்டு பல்வேறு இடங்களில் கிளாடிங் கொடுக்கப்பட்டு பின்புற பம்பரும், செங்குத்தான எல்இடி டெயில் விளக்கு, பிக்சல் வடிவ மூடுபனி விளக்குகள் மற்றும் வெள்ளி ஸ்கிட் பிளேட் உள்ளது.

இன்டீரியரில் ‘விஷன் எஸ்’ என்று எழுதப்பட்ட 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் இரட்டை டிஸ்பிளே பெற்று மிக அகலமான திரைகள், வயர்லெஸ் சார்ஜர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை பெற்றுள்ளது.

டேஷ்போர்டு, கதவு டிரிம்கள் மற்றும் இருக்கைகளுக்கு இரட்டை நிறத்துடன் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளது.

3,990 மிமீ முதல் 4,320 மிமீ வரை நீளம் கொண்ட எஸ்யூவி ஆக விளங்கும் மேலும் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சார பவர்டிரெய்ன்களையும் ஆதரிக்கிறது.

இதுதவிர மஹிந்திரா நிறுவனம் விஷன் எக்ஸ், விஷன் எஸ்எக்ஸ்டி மற்றும் விஷன் T ஆகியவற்றை இன்றைக்கு வெளியிட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.