Flipkart Independence Day Sale 2025: ஐபோன், ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான தள்ளுபடி

Flipkart Independence Day Sale 2025: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்சில் சுதந்திர தின சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. பிளிப்கார்ட் மீண்டும் ஒருமுறை சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு பொருட்கள் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையிலும் சந்தை விலையிலிருந்து மிகப்பெரிய தள்ளுபடியிலும் கிடைக்கின்றன. 

பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025

பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025 -இல் கிடைக்கும் 5 சிறந்த பிராண்டட் போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம். இதில், ஐபோன், சாம்சங் மற்றும் ரியல்மி போன்ற சமீபத்திய ஸ்மார்ட்போன்களின் முழுமையான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

iPhone 16

ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் 16 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு கிடைக்கிறது. ஆனால் வங்கி சலுகைகளுடன், வாடிக்கையாளர்கள் அதை ரூ.66,499 -க்கு வாங்கலாம். இது தவிர, பழைய போனை பரிமாற்றினால், இன்னும் அதிக தள்ளுபடியை பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகை உங்கள் போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது. இதில் 48MP கேமரா மற்றும் 6.1-இன்ச் சூப்பர் XDR OLED டிஸ்ப்ளே உள்ளது.

Samsung Galaxy S24 FE

சாம்சங் கேலக்ஸி S24 FE மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.35,999க்கு கிடைக்கிறது. ஆனால் வங்கி தள்ளுபடியில் இதை ரூ.33,249க்கு வாங்கலாம். மேலும், பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதன் விலை இன்னும் குறையும். இதில் உங்களுக்கு பெரிய 4500mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் Exynos 2400 செயலி கிடைக்கும்.

Poco F7 5G

போகோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.31,999க்கு கிடைக்கிறது. வங்கி சலுகைகளின் தள்ளுபடிக்குப் பிறகு, அதை ரூ.30,399க்கு வாங்கலாம். இது தவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் கூடுதல் நன்மையைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 6.83 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பெரிய 7,550mAh பேட்டரியுடன் வருகிறது.

Samsung Galaxy S24

இந்த சாம்சங் போனை ரூ.46,499க்கு வாங்கலாம். மேலும், கூடுதல் வங்கி தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அதை ரூ.44,649க்கு எளிதாகப் பெறலாம். இதில் எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இந்த போனில், உங்களுக்கு 50MP முதன்மை கேமரா, 4000mAh பேட்டரி மற்றும் Exynos 2400 செயலி வழங்கப்பட்டுள்ளது.

Realme GT 6

Realme நிறுவனத்தின் இந்த போன் தற்போது ரூ.27,999க்கு கிடைக்கிறது. இது தவிர, கூடுதல் வங்கி தள்ளுபடியைப் பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்போனை ரூ.26,599க்கு வாங்கலாம். பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் GT 6 ஸ்னாப்டிராகன் 8s Gen3 செயலி, 50MP கேமரா மற்றும் 5500mAh பேட்டரியுடன் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

About the Author

Sripriya Sambathkumar

நாட்டின் மீது பற்று, தமிழின் மீது தாகம், இலக்கியத்தில் ஆர்வம், எழுதுவதில் நாட்டம், புத்தகங்கள் மீது பித்து, புதுமையில் விருப்பம், பழமையுடன் நெருக்கம், இசையின் மீது ஈர்ப்பு, பலவித ரசனைகளின் ரசிகை!!

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.