சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரி உயர்த்தி உள்ள நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். உற்பத்தித் துறை நெருக்கடியில் இருப்பதால், லட்சக்கணக்கான மக்களின் […]
