ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18% ஆக குறையும்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கூறியது என்ன? – முழு விவரம்

புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும் என்று சுதந்​திர தின உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

நாடு முழு​வதும் நேற்று 79-வது சுதந்​திர தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்​கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் பேசி​ய​தாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்​திரம் அடைந்​தது. தேசத் தந்தை மகாத்மா காந்​தி​யின் கொள்​கைகளைப் பின்​பற்றி அரசி​யலமைப்பு சட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 75 ஆண்​டு​களாக நம்மை அரசி​யலமைப்பு சட்​டம் வழிநடத்தி வரு​கிறது.

இதை உரு​வாக்க ராஜேந்​திர பிர​சாத், அம்பேத்​கர், நேரு, சர்​தார் வல்​லபபாய் படேல், சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன், ஹன்சா மேத்தா, தாட்​சாயணி வேலா​யுதன் உள்​ளிட்​டோர் மிக முக்​கிய பங்கு வகித்தனர். அவர்​களுக்கு தலை​வணங்கி மரி​யாதை செலுத்துகிறேன்.

சிந்து நதி நீர் ஒப்​பந்​தம்: சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் அநீ​தி​யானது, ஒருதலைப்​பட்​ச​மானது. இந்​தி​யா​வில் உற்​பத்​தி​யாகும் நதி​களின் நீர், எதிரி​யின் வயல்​களுக்கு பாய்ந்​தது. கடந்த 70 ஆண்​டு​களாக இந்​திய விவ​சா​யிகள் பெரும் இழப்பை சந்​தித்​தனர். இனிமேல் இந்​தி​யா​வுக்கு சொந்​த​மான நீர், இந்​திய விவ​சா​யிகளுக்கு மட்​டுமே பயன்​படும். விவ​சா​யிகள், தேசத்​தின் நலனுக்கு எதி​ரான சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்தை ஏற்​றுக் கொள்ள மாட்​டோம். ரத்​த​மும் தண்​ணீரும் ஒன்​றாகப் பாயக்​கூ​டாது.

இரட்டை தீபாவளி: இந்​திய மக்​களின் வியர்​வை​யால் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்கி பயன்​படுத்த வேண்​டும். இந்த விவ​காரத்​தில் வணி​கர்​களும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்​டும். வரும் தீபாவளி பண்​டிகை​யை, இரட்டை தீபாவளி​யாக மாற்​றப் போகிறேன்.

இந்த தீபாவளி​யில் உங்​களுக்கு மிகப்​பெரிய பரிசு கிடைக்​கப் போகிறது. கடந்த 8 ஆண்​டு​களில் ஜிஎஸ்​டி​யில் பெரிய சீர்​திருத்​தங்​களை செய்​துள்​ளோம், நாடு முழு​வதும் வரிச்​சுமை​யைக் குறைத்து உள்​ளோம், வரி முறையை எளிமைப்​படுத்தி உள்​ளோம், 8 ஆண்​டு​களுக்​குப் பிறகு, இந்த மதிப்​பாய்வை ஒரு முறை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்​பது காலத்​தின் கட்​டா​யம். இதற்​காக, உயர் நிலைக் குழு அமைக்​கப்​பட்​டது.

இந்த குழு பல்​வேறு கட்ட ஆய்​வு​களை நடத்​தி​யது. மாநில அரசுகளின் கருத்​துகளை கேட்​டறிந்​தது. இதன்​படி வரும் தீபாவளி பண்​டிகை​யின்​போது சாமானிய மக்​களுக்கு பலன் அளிக்​கும் வகை​யில் வரி​கள் கணிச​மாகக் குறைக்​கப்​படும். சிறு, குறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள், சிறு தொழில்​முனை​வோரும் பெரிதும் பலன் அடை​வார்​கள். அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும். இது பொருளா​தார வளர்ச்​சிக்கு புதிய உத்​வேகத்தை அளிக்​கும்.

உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​களின் பட்​டியலில் தற்​போது 5-வது இடத்​தில் உள்​ளோம். விரை​வில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்​போம். உலக பொருளா​தா​ரத்​தில் மந்​த​மான சூழல் காணப்​படு​கிறது. எனினும் இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் வலு​வாக இருக்​கிறது. பணவீக்​கம் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. உலகின் நம்​பிக்கை நட்​சத்​திர​மாக நமது நாடு விளங்​கு​கிறது.

நமது அந்​நிய செலா​வணி கையிருப்பு மிக​வும் வலு​வாக உள்​ளது. உலகளா​விய மதிப்​பீட்டு நிறு​வனங்​கள் இந்​திய பொருளா​தாரத்தை பாராட்டி வரு​கின்​றன. வளர்ந்து வரும் பொருளா​தா​ரத்​தின் நன்​மை​கள் ஏழைகள், விவ​சா​யிகள், பெண்​கள், நடுத்தர வர்க்​கத்​தினரை சென்​றடைய புதிய முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறோம். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

மத்​திய நிதி​யமைச்சக வட்​டா ரங்​கள் கூறும்​போது, “தற்​போது 5%, 12%, 18%, 28% என்ற 4 பிரிவு​களில் ஜிஎஸ்டி வரி விதிக்​கப்​படு​கிறது. வரும் தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​துள்​ளார். இதன்படி 5, 18 ஆகிய இரு பிரிவுகளில் மட்​டுமே ஜிஎஸ்டி வரி வி​திக்​கப்​படும். இதன்​படி ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18 சதவீத​மாகக் குறை​யும். எனினும் சில ஆடம்பர பொருட்​களுக்​கு 40% வரி வி​திக்​கப்​படும்​’’ என்​று தெரிவித்​தன​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.