நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்​தது. பாகிஸ்​தான் ராணுவம், நமது ராணுவ தளங்​கள், விமானப் படைத்தளங்கள்,வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் மக்​களை குறி​வைத்து ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் மூலம் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​தி​யது.

அனைத்து ஏவு​கணை​களும் ட்ரோன்​களும் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தா​னால் சிறிய சேதத்​தைக்​கூட ஏற்​படுத்த முடிய வில்​லை. வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் மருத்​து​வ​மனை​கள், ரயில்வே கட்​டமைப்​பு​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​களுக்கு புதிய தொழில்​நுட்ப தளங்​கள் மூலம் முழு​மை​யான பாது​காப்பு வழங்​கப்​படும்.

மகா​பாரத போர் நடந்​த​போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்​கி​னார். சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளி தடுக்​கப்​பட்​டது, அர்​ஜுனன், ஜெயத்​ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்​தது. இது சுதர்சன சக்​கரத்​தின் வலிமை ஆகும்.

இதே​போல நாட்​டின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர திட்​டம் தொடங்​கப்​படும். இந்த சுதர்சன சக்​கரம் சக்​தி​வாய்ந்த ஆயுத அமைப்​பாக இருக்​கும், எதிரி​யின் தாக்​குதலை முறியடிப்​பது மட்​டுமல்​லாமல், எதிரியை பல மடங்கு அதி​க​மாகத் தாக்​கும் வலிமை​யைக் கொண்​டிருக்​கும்.

சுமார் 50 ஆண்​டு​களுக்கு முன்பு நாட்​டில் அவசரநிலை அமல் செய்​யப்​பட்​ட​போது அரசி​யலமைப்பு சட்​டத்​தின் குரல்​வளை நெரிக்​கப்​பட்​டது. இதை ஒரு​போதும் மறக்​கக்​கூ​டாது. நாம் ஒன்​றிணைந்து அரசி​யலமைப்பு சட்​டத்தை வலுப்​படுத்த வேண்​டும்.

வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும். இதற்​காக யாருக்​கும் தலை​வணங்​கவோ, அடிபணி​யவோ மாட்​டோம். ஒன்​று​பட்டு கடின​மாக உழைப்​போம். வெற்றி இலக்கை எட்​டு​வோம்.ஏற்​கெனவே 4 செமி கண்​டக்​டர் ஆலைகளுக்கு அனு​மதி அளிக்​கப்​பட்டு உள்​ளது.

புதி​தாக 6 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்​கப்பட உள்​ளன. இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட சிப்​கள், இந்த ஆண்டு இறு​திக்​குள் சந்​தை​யில் கிடைக்​கும்.புனல் மின்​சா​ரத்தை அதி​கரிக்க புதிய அணை​களைக் கட்டி வரு​கிறோம். பசுமை ஹைட்​ரஜன் திட்​டத்​துக்​காக ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாயை முதலீடு செய்து வரு​கிறோம். புதி​தாக 10 அணு உலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பெட்​ரோல், டீசல், எரி​வாயு இறக்​கும​திக்​காக பெரும் தொகையை செல​விட்டு வரு​கிறோம். இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண கடலுக்கு அடி​யில் எண்​ணெய் வளம், எரி​வாயு வளத்தை கண்​டறிய தேசிய ஆழ்​கடல் ஆய்​வுப் பணியை தொடங்க உள்​ளோம். கனிமங்​கள் வளத்தில் சுய​சார்பை எட்ட நாடு முழு​வதும் 1200 க்கும் மேற்​பட்ட இடங்​களில் அகழ்​வாய்வு பணி​கள் நடை​பெறுகின்றன.

நமது குரூப் கேப்​டன் ஷுபான்ஷு சுக்லா அண்​மை​யில் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்று திரும்​பி​னார். அடுத்த கட்​ட​மாக நமது வீரர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​துக்கு தயா​ராகி வரு​கிறோம். அடுத்து சொந்​த​மாக விண்​வெளி நிலை​யத்தை உரு​வாக்க பணி​யாற்றி வரு​கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதலை நடத்​தினர். அதற்காக நடத்தப்பட்ட பதிலடிதான் ஆபரேஷன் சிந்​தூர். இதற்​காக ராணுவத்​துக்கு முழு சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டது. எதிரி​யின் தொலை​தூர பகு​தி​களில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் தகர்க்​கப்​பட்​டன. இன்​றள​வும் பாகிஸ்​தான் தூக்​கமின்றி தவித்து வரு​கிறது.

தீவிரவாதிகள் எங்​கிருந்​தா​லும் வேட்​டை​யாடப்​படு​வார்​கள். எதிரி​களின் அணு ஆயுத மிரட்​டல்​களுக்கு இந்​தியா ஒரு​போதும் அஞ்​சாது. ஒரு​வேளை எதிரி​கள் அணு ஆயுத தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தால் நமது ராணுவம் தகுந்​த பதிலடி கொடுக்​கும் என்று பிரதமர் மோடி தி்ட்டவட்டமாக கூறினார்​.

3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: இன்​றைய தினம் இளைஞர்​களின் நலனுக்​காக ரூ.1 லட்​சம் கோடி மதிப்​பிலான பிரதமரின் வேலை​வாய்ப்பு திட்​டம் தொடங்​கப்​பட்டுள்​ளது.

இத்திட்​டத்​தின் கீழ் தனி​யார் துறை​யில் வேலை​வாய்ப்பு பெறும் ஒவ்​வொரு​வருக்​கும் அரசு சார்​பில் ரூ. 15,000 வழங்​கப்​படும். புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நிறு​வனங்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். சுமார் 3.5 கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும் என்று பிரதமர் மோடி உறு​தி​யளித்​தா​ர்​.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்: சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது: 100 ஆண்​டு​களுக்கு முன்பு ராஷ்ட்​ரிய ஸ்வயம்​சேவக் சங்​கம் (ஆர்​எஸ்​எஸ்) நிறு​வப்​பட்​டது. அதன் தொண்​டர்​கள் ஒரு நூற்​றாண்டு கால​மாக தாய்​நாட்​டின் நலனுக்​காக வாழ்க்​கையை அர்ப்​பணித்து உள்​ளனர்.

சேவை, அர்ப்​பணிப்​பு, ஒழுக்​கம் ஆகியவை அதன் அடை​யாளங்​கள். உலகின் மிகப்​பெரிய தன்​னார்வ தொண்டு அமைப்​பாக ஆர்​எஸ்​எஸ் செயல்​படு​கிறது. அதன் சேவைக்கு பங்​களித்த தொண்​டர்​களை​யும் வணங்​கு​கிறேன். ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் அர்ப்​பணிப்​புள்ள பயணத்​தில் தேசம் பெருமை கொள்​கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.