முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: ​முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகள் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் சென்​னையி​லிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாக​னப் பேரணியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் தமிழ்​நாடு முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகள் விரை​வில் நடை​பெற இருக்​கின்​றன.

இதில் நடத்​தப்​படும் மாவட்ட அளவி​லான 25 வகை​யான போட்​டிகள், மண்டல அளவி​லான 7 வகை போட்​டிகள், மாநில அளவி​லான 37 வகை விளை​யாட்​டுப் போட்​டிகளில் 19 வயதுக்​குட்​பட்ட பள்ளி மாணவர்​கள், 25 வயதுக்​குட்​பட்ட கல்​லூரி மாணவர்​கள், 15 வயது 35 வயது வரையி​லான பொதுப் பிரி​வினர், அரசுப் பணி​யாளர்​கள் மற்​றும் அனைத்து வயது மாற்​றுத் திற​னாளி​கள் பங்​கேற்​க​வுள்​ளனர்.

தனி நபர் போட்​டிகளில் மாநில அளவில் வெற்​றி​பெறு​பவருக்கு முதல் பரி​சாக ரூ.1 லட்​ச​மும், 2-ம் பரி​சாக ரூ.75 ஆயிர​மும், 3-ம் பரி​சாக ரூ.50 ஆயிர​மும், அதே​போல் குழு போட்​டிகளில் மாநில அளவில் வெற்​றி​பெறு​பவர்​களுக்கு முதல் பரி​சாக ரூ.75 ஆயிர​மும், 2-ம் பரி​சாக ரூ.50 ஆயிர​மும், 3-ம் பரி​சாக ரூ.25 ஆயிர​மும் வழங்​கப்பட உள்​ளது. இந்த விளை​யாட்​டுப்போட்​டிகளுக்​கான முன்​ப​திவு https://cmtrophy.sdat.in/ மற்​றும் https://sdat.tn.gov.in ஆகிய இணை​யதளங்​களில் நடை​பெற்று வரு​கிறது.

நாளை புறப்பாடு… இந்​நிலை​யில் முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகள் குறித்து பரவலாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் இந்​திய பெண்​கள் மோட்​டார் சங்​கம் சார்​பில் இருசக்கர வாக​னப் பேரணி சென்னை முகாம் அலு​வல​கத்​திலிருந்து நேற்று தொடங்​கியது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

பேரணி​யில் சர்​வ​தேச மோட்​டார் பந்தய வீராங்​கனை நிவேதா ஜெசிக்கா தலை​மை​யில் வீரர், வீராங்​க​னை​கள் சென்​னையி​லிருந்து இருசக்கர வாக​னத்​தில் புறப்​பட்டு தாம்​பரம், திண்​டிவனம், விழுப்​புரம், திருச்​சி, புதுக்​கோட்​டை, சிவகங்​கை, ராமநாதபுரம் வழி​யாக தனுஷ்கோடி சென்​றடைந்து மீண்​டும் நாளை (ஆக.17) காலை அங்​கிருந்து புறப்​பட்டு சென்னை வந்​தடைய உள்​ளனர்.

இந்​நிகழ்​வில் பள்​ளிக்​கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், தயாநிதி மாறன் எம்​பி, விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்டி உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.