கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

மதுரை: தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், தமிழ்​நாட்​டில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தொடக்​கக் கல்​வி​யில் தமிழ் கற்​பிக்​கப்​ப​டாது என்​றும், 6-ம் வகுப்​பிலிருந்து ஒரு வகுப்​பில் 20 மாணவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே தமிழ் பயிற்​று​விக்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. அவ்​வாறு விரும்​பும் மாணவர்​களுக்கு தமிழ் பயிற்​று​விக்க தற்​காலிக ஆசிரியர்​கள் மட்​டுமே நியமிக்​கப்​படு​வார்​கள். வாரத்​தில் 2, 3 வகுப்​பு​கள் மட்​டுமே நடத்​தப்​படும். ஒவ்​வோர் ஆண்​டும் பிப்​ர​வரி மாதத்​திலேயே தமிழ் வகுப்​பு​களை நிறுத்​தி​விட வேண்​டும் என்​பது போன்ற விதி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிகிறது.

எனவே, தமிழகத்​தில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு தமிழ் மொழியை பாட​மாக சேர்க்​க​வும், தமிழ் ஆசிரியர்​களை நிரந்​தர​மாக பணி​யில் அமர்த்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அம்​மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், மரிய கிளாட் அமர்​வு, “கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களின் பாடத் திட்​டத்​தில் நீதி​மன்​றம் தலை​யிட்​டு, எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க இயலாது. ஏதேனும் கோரிக்​கைகள் இருப்​பின், மனு​தா​ரர் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களை அணுகி முறை​யிடலாம்” என்று தெரி​வித்​து, வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.