நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு: கொல்கத்தா போலீஸார் விசாரணை

கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார்.

இவரது மூதாதையர் வீடு கொல்​கத்​தா​வின் கஸ்பா நகர் பகு​தி​யில் உள்​ளது. தற்போது இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்த வீட்டை அவரது சகோ​தரர் மிலன் சவுத்ரி என்​பவர் பராமரித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்​தம் செய்ய சென்​றார். அப்​போது வீட்​டின் பின்​புற கதவு உடைக்​கப்​பட்டு வீட்​டிலிருந்த புலா சவுத்​ரி​யின் பத்மஸ்ரீ உள்​ளிட்ட ஏராள​மான பதக்​கங்​கள், நினை​வுப்​பரிசுகள் திருடு போனது தெரிய​வந்​தது.

அவரது அர்​ஜுனா விருது, டென்​சிங் நோர்கே பதக்​கத்தை மட்​டும் மர்ம நபர்​கள் விட்​டு​விட்​டுச் சென்​றுள்​ளனர். தகவல் அறிந்த புலா சவுத்​ரி, உடனடி​யாக போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இதுகுறித்து புலா சவுத்ரி கூறிய​தாவது: எனது வாழ்​நாளில் நான் வென்ற பதக்​கங்​கள், நினைவு பொருட்​கள் அனைத்​தை​யும் மர்ம நபர்​கள் திருடிச் சென்​று​விட்​டனர். அதன் மூலம் எந்த பணமும் அவர்​களுக்​குக் கிடைக்​காது. திருடு போன விருதுகள் எனது பொக்​கிஷங்​கள். எனது வீடு தனி​யாக இருப்​ப​தா​லும், யாரும் அங்கு இல்​லாத​தா​லும் அடிக்​கடி திருடு நடக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இது, புலா சவுத்ரி வீட்​டில் நிகழ்ந்த 3-வது திருட்​டு சம்​பவம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.