பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த வான் பாதுகாப்பு சுதர்சன சக்கரத்தின் சிறப்புகள் என்ன?

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்​டில் இஸ்​ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு கவசத்தை நிறு​வியது. எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​களை அயர்ன் டோமில் இருந்து புறப்​படும் ஏவு​கணை​கள் நடு​வானில் அழித்​து​விடும். இதை அடிப்​படை​யாக வைத்து இந்​தி​யா​வின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர வான் பாது​காப்பு கவசம் உரு​வாக்​கப்பட உள்​ளது.

ஆபரேஷன் சிந்​தூரின்​போது ஆகாஷ்தீர் என்ற வான் பாது​காப்பு கவசத்தை பயன்​படுத்​தினோம். தற்​போது ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசத்​தில் எஸ்​400 ஏவு​கணை​கள், பிரள​யம், பிருத்​வி,
ஏஏடி, ஆகாஷ், எஸ்​125 பெசோ​ரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்​எஸ்​ஏஎம், எஸ்​200 ஆகிய ஏவு​கணை​கள் இணைக்​கப்​பட்டு உள்​ளன. ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கட்​டமைப்​பு​கள் பொருத்​தப்​பட்ட 107 வாக​னங்​கள் எல்​லைப் பகு​தி​களில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. இதோடு ரேடார்​கள், சென்​சார்​கள், உளவு செயற்​கைக்​கோள்​கள் இணைக்​கப்​பட்டு இருக்​கிறது.

இந்​திய வான் பரப்​பில் எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் நுழை​யும்​போது ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசத்​தில் பதி​வாகும். எதிரி​யின் ஆயுதம் என்ன?, அதற்கு எந்த வகை​யான ஏவு​கணை​களை பயன்​படுத்​தலாம் என்​பதை ஆகாஷ்தீர் சில நொடிகளில் கணக்​கிட்டு தகவல் அளிக்​கும். இதன்​படி எதிரி​களின் வான்​வழி தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​படும்.

அடுத்​தகட்​ட​மாக ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவச திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டு, சுதர்சன சக்கர வான் பாது​காப்பு கவச​மாக உரு​வெடுக்க உள்​ளது. இதையே பிரதமர் மோடி சுதந்​திர தின உரை​யில் குறிப்​பிட்டு உள்​ளார். புதிய வான் பாது​காப்பு கவசம் உளவு செயற்​கைக்​கோள்​கள் அளிக்​கும் தகவல்​களின் அடிப்​படை​யில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் செயல்​படும்.

அணு ஆயுதங்​களை சுமந்து செல்​லும் அக்​னி, பிருத்​வி, கே4 உள்​ளிட்ட இந்​தி​யா​வின் அனைத்து வகை​யான ஏவு​கணை​களும் சுதர்சன சக்கர வான் பாது​காப்பு கவசத்​துடன் இணைக்​கப்​படும். இதன்​மூலம் வழி​பாட்​டுத் தலங்​கள், மருத்​து​வ​மனை​கள், ரயில்வே கட்​டமைப்​பு​கள், எரிசக்தி நிலை​யங்​கள், குடி​யிருப்பு பகு​தி​களுக்​கும் முழு​மை​யான வான் பாது​காப்பு வழங்​கப்​படும். வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் சுதர்சன சக்கர கவசம் முழு​மை​யாக பயன்​பாட்​டுக்கு வரும். எதிரி​யின் தாக்​குதலை முறியடிப்​பது மட்​டுமன்றி எதிரியை பல மடங்கு அதி​க​மாக தாக்​கும் வலிமை​யை​யும் புதிய வான் பாது​காப்​பு கவசம்​ கொண்​டிருக்​கும்​. இவ்​வாறு பாது​காப்​புத்​ துறை வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.