வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாஜகவை நிறு​விய தலை​வர்​களில் ஒரு​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்டி டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விட​மான சதைவ் அடலில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்​ஷ்,மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா​ உள்​ளிட்ட தலை​வர்​கள் மலர்​களை தூவி மரி​யாதை செலுத்​தினர்.

வாஜ்​பாய் நினைவு தினத்தை முன்​னிட்டு பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “அடல்​ஜி​யின் நினைவு நாளில் அவரை நினை​வில் கொள்​கிறேன். இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த முன்​னேற்​றத்​துக்​கான அவரது அர்ப்​பணிப்​பும் சேவை மனப்​பான்​மை​யும், வளர்ந்த மற்​றும் தன்​னிறைவு பெற்ற இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் அனை​வருக்​கும் தொடர்ந்து உத்​வேகம் அளித்து வரு​கிறது” என்று கூறி​யுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்​பர் 25-ம் தேதி வாஜ்​பாய் பிறந்​தார். இந்​தி​யப் பிரதமராக 3 முறை தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். முழு பதவிக் காலத்​தை​யும் நிறைவு செய்த முதல் காங்​கிரஸ் அல்​லாத தலை​வர் இவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.