சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக செனடாப் ரோடு சந்திப்பு முதல் அறிவாலயம் வரை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி நோக்கி செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறமாக தியாகராய சாலையில் திரும்பி […]
