எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 

புதுடெல்லி: ​வாக்கு திருட்டு குற்​றச்​சாட்டை நிராகரித்த தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், மக்​களை தவறாக வழிநடத்​தும் மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்​தி, அரசி​யல் சாசன சட்​டத்தை அவம​திக்​கிறார் என கூறி​யுள்​ளார்.

பிஹாரில் வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில், 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. தேர்​தல் ஆணை​யம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்​வ​தாக மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் டெல்​லி​யில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிரி​களும் இல்​லை, ஆதர​வாளர்​களும் இல்​லை. எங்​களுக்கு அனைத்து அரசி​யல் கட்​சிகளும் சரி சமம்​தான். வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டும் என அனைத்து கட்​சிகளும் கடந்த 20 ஆண்​டு​களாக, கோரிக்கை விடுத்து வந்​தன. அதனால் தேர்​தல் ஆணை​யம் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த பணியை பிஹாரில் இருந்து தொடங்​கியது. அனைத்து வாக்​காளர்​கள், அரசி​யல் கட்​சிகள் நியமித்த 1.6 லட்​சம் வாக்​குச் சாவடி முகவர்​கள் ஆகியோ​ருடன் இணைந்து செயல்​பட்டு வெளிப்​படை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்டு வரைவு வாக்​காளர் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது.

எனவே, வாக்கு திருட்டு போன்ற வார்த்​தைகளை பயன்​படுத்தி மக்​களை தவறாக வழிநடத்​து​வது அரசி​யல்​சாசன சட்​டத்தை அவம​திக்​கும் செயல். வாக்கு திருட்​டு, இரட்டை ஓட்டு போன்ற குற்​றச்​சாட்​டு​கள் எல்​லாம் ஆதா​ரமற்​றவை. பிஹார் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்த பணி​களை மேற்​கொண்ட அனை​வரும் வெளிப்​படை​யான முறை​யில் செயல்​பட்டு வாக்​காளர் பட்​டியலை உரு​வாக்​கியது வெற்​றிகர​மான செயல். இது குறித்து சில அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தவறான தகவல்​களை பரப்​புவது மிக​வும் கவலை​யளிப்​ப​தாக உள்​ளது. பிஹாரில் வரைவு வாக்​காளர் பட்​டியலில் வாக்​காளர்​களை சேர்க்க உரிமை கோர​வும், எதிர்ப்பு தெரிவிக்​க​வும் அனைத்து கட்​சிகளுக்​கும் தேர்​தல் ஆணை​யம் அழைப்பு விடுக்​கிறது. அதற்கு இன்​னும் 15 நாட்​கள் உள்​ளன. 45 நாட்​களுக்​குள் புகார் மனுக்​கள் அளிக்​கப்​ப​டா​மல், ஓட்டு திருட்டு என குற்​றம் சுமத்​து​வது அரசி​யல் சாசனத்தை அவம​திப்​பது போன்​றது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.