சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே நட்பு இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த […]
