டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

புதுடெல்லி: டெல்லி அரு​கே​யுள்ள குரு​கி​ராமில் பாடகர் எல்​விஷ் யாதவ் வீட்​டின் மீது மர்ம நபர்​கள் நேற்று துப்​பாக்​கிச் சூடு நடத்தினர். டெல்லி அருகே உள்ள குரு​கி​ராமை சேர்ந்​தவர் எல்​விஷ் யாதவ் (27). பாடகர், யூ டியூபர், தொழில​திபர் என பன்​முகத்தன்மை கொண்ட அவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்தி பிக்​பாஸ் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று முதல் பரிசை வென்​றார்.

அவரது யூ டியூப் சேனலில் 1.5 கோடிக்​கும் மேற்​பட்ட சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இது​வரை 13 இசை ஆல்​பங்​களை அவர் வெளியிட்டு உள்​ளார். பல்​வேறு தொலைக்​காட்சி நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று உள்​ளார்.

யூ டியூப், இசை ஆல்​பங்​கள் மூலம் மிக குறுகிய காலத்​தில் அவர் ரூ.50 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளார். சிஸ்​டம் என்ற பெயரில் ஆடைகள் விற்​பனை நிறு​வனத்​தை​யும், ஆன்​லைன் விளை​யாட்டு தொடர்​பான யூ டியூப் சேனலை​யும் அவர் வெற்​றிகர​மாக நடத்தி வரு​கிறார்.

டெல்லி குரு​கி​ராமின் ரயில் விகார் பகு​தி​யில் எல்​விஷ் யாத​வின் வீடு உள்​ளது. நேற்று அதி​காலை 5.30 மணி அளவில் எல்​விஷ் யாத​வின் வீட்​டின் மீது இரு மர்ம நபர்​கள் சரமாரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் வீட்​டின் பால்​க​னி, சுவர், ஜன்​னல்கள், கதவு​களில் குண்​டு​கள் துளைத்​தன. அந்த நேரத்​தில் எல்​விஷ் யாதவ் வீட்​டில் இல்​லை.

அங்கிருந்த அவரது தாயாருக்கும் பணிப் பெண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து குரு​கி​ராம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். வீட்​டில் இருந்து ஏராள​மான துப்​பாக்கி குண்​டு​கள் கைப்​பற்​றப்​பட்டு உள்​ளன. வீடு முழு​வதும் 12 இடங்​களில் துப்​பாக்கி குண்​டு​கள் பாய்ந்​ததற்​கான தடயங்​கள் உள்​ளன.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: எல்​விஷ் யாத​வின் வீட்​டின் மீது மர்ம நபர்​கள் 30-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்கி குண்​டு​களை சுட்டு உள்​ளனர். அவற்றை கைப்​பற்றி எந்த வகை​யான குண்​டு​கள் என்று ஆய்வு செய்து வரு​கிறோம். சிசிடிவி கேம​ரா​வில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

பாவ் கேங் பொறுப்​பேற்பு: எல்​விஷ் யாதவ் வீட்​டின் மீது நடத்​தப்​பட்ட துப்​பாக்​கிச்​சூடு தாக்​குதலுக்கு ஹிமான்ஷு பாவ் தலைமையிலான பாவ் கேங் என்ற ரவுடி கும்​பல் பொறுப்​பேற்று உள்​ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் டெல்லி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் கொலை, ஆள்​கடத்​தல், மிரட்டி பணம் பறிப்​பது உள்​ளிட்ட குற்​றச் செயல்​களில் பாவ் கேங் கும்​பல் ஈடு​பட்டு வரு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.