திமுக கூட்டணி கட்சிகள் ஆட்​சியில் பங்கு கேட்கவில்லை: தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

சேலம்: திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்​சி, ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச​வில்லை என்று தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் கூறி​னார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சேலத்​தில் தனி​யார் மின்​னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதல்​வர் ஸ்டா​லினிடம் கோரிக்கை வைத்​துள்​ளோம். பாமக​வில் தந்​தை, மகனுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள பிரச்​சினையை, அவர்​கள் பேசி தீர்த்​துக் கொள்​வார்​கள். பாமக எனது பழைய வீடு, அவ்​வீட்டை பற்​றிக் குறை கூற மாட்​டேன்.

திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்சி என்ற கோரிக்​கையை முன்​வைக்​க​வில்​லை. அதே​போல, ஆட்​சி​யில் பங்கு குறித்தும் யாரும் பேச​வில்​லை. இது சம்​பந்​த​மாக இரண்​டாம் கட்ட தலை​வர்​கள், அவர​வர் ஆசையை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர்.

ஆனால், திமுக கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் யாரும் அதைப்​பற்றி பேச​வில்​லை. அந்த எண்​ண​மும் இல்​லை. திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. நான் சட்​டப்​பேர​வை​யில் கோப​மாக பேசி​னாலும், திமுக அமைச்சர்கள் அதை ஏற்​றுக் கொண்டு, உரிய பதில் அளித்து வரு​கின்​றனர்.

சாதி வாரி​யான கணக்​கெடுப்​பு​ தான் இடஒதுக்​கீட்​டுக்​கான தீர்​வு. அதை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. விரை​வில் மத்​திய அரசு சாதி வாரி கணக்​கெடுப்பை நடத்த வேண்​டும். மத்​திய அரசு காலம் தாழ்த்​தி​னால், தமிழக அரசு சாதி வாரி கணக்​கெடுப்பு நடத்​து​மாறு வலி​யுறுத்த வேண்​டும். அதே​போல, அந்​தந்த மாநில வேலைகளை அந்​தந்த மாநில மக்​களுக்கு வழங்​கும் சட்​டத்தை நிறைவேற்ற மத்​திய அரசு சட்​டம் கொண்டு வர வேண்​டும். இவ்​வாறு வேல்முருகன் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.