ராணுவ பயிற்சியில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கூறி​யுள்ளனர்.

தேசிய பாது​காப்பு அகாட​மி, இந்​திய ராணுவ அகாடமி போன்​றவற்​றில் பயிற்​சி​யின்​போது எதிர்​பா​ரா​வித​மாக காயமடைந்து கை, கால்​களை இழந்​தவர்​கள் ராணுவப் பணிக்கு சேர்க்​கப்​படு​வது இல்​லை. அந்த வகை​யில், கடந்த 1985 முதல் இது​வரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் 20 பேரும் மாற்​றுத் திற​னாளி​யாகி வீட்​டுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களுக்கு மாதம்​தோறும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை வழங்​கப்​படு​கிறது. ஆனால், முன்​னாள் ராணுவத்​தினருக்கு வழங்​கப்​படு​வது​போல மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வ​தி​யம், மருத்​துவ சிகிச்சை ஆகியவை மறுக்​கப்​படு​கிறது. இதனால், அவர்​கள் இன்​னலுக்கு ஆளாவ​தாக செய்தி வெளி​யானது.

இதன் அடிப்​படை​யில், உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக விசா​ரணை மேற்​கொண்​டது. நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது: பல்​வேறு போட்​டித் தேர்​வு​களில் வெற்றி பெற்று ராணுவ பயிற்சி அகாட​மிகளுக்கு சென்று காயமடைகிற அல்​லது மாற்​றுத் திற​னாளி​யாகிற துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பக் கூடாது. முப்​படைகளி​லும் பணி​யாற்ற அவர்​களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்​டும். அவர்​களுக்கு உட்​கார்ந்து பணிபுரி​யும் வேலைகளை வழங்​கு​வது குறித்து ஆராய வேண்​டும்.

அவர்​களது மருத்​துவ செல​வுக்​காக மாதம்​தோறும் வழங்​கப்​படும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகையை உயர்த்​து​வது குறித்​தும், பயிற்​சி​யின்​போது காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாக மாறும், உயி​ரிழக்​கும் வீரர்​களுக்கு காப்​பீட்​டுத் திட்​டத்தை செயல்​படுத்​து​வது குறித்​தும் பரிசீலிக்க வேண்​டும். இந்த வழக்​கில் மத்​திய அரசும், பாது​காப்பு படைகளும் பதில் அளிக்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை செப்​டம்​பர் 4-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.