Redmi 15 5G: Redmi நிறுவனம் தனது சக்திவாய்ந்த Redmi 15 5G போனை இன்று, ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரமாண்டமான அறிமுகத்திற்கு முன்பே, நிறுவனம் அதன் பேட்டரி, வடிவமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி அறிவித்திருந்தது. Redmi 15 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள், விலை மற்றும் பிற விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரெட்மி 15 5ஜி: 3 வண்ணங்களில் கிடைக்கும்
Redmi 15 5G போன் Sandy Purple, Frosted White மற்றும் Midnight Black ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும். மேலும், Gemini ஒருங்கிணைப்பு மற்றும் Circle to Search போன்ற அம்சங்களும் இதில் கிடைக்க வாய்ப்புள்ளது. Redmi 15 5G இன் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கலாம் என கூறப்ப்படுகின்றது. இதில் புதிய பல அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
Redmi 15 5G போனின் விவரக்குறிப்புகள்
Redmi 15 5G ஸ்மார்ட்போனில் 6.9-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதம் இருக்கக்கூடும். இது தவிர, TUV Rheinland Low Blue Light, Circadian Friendly மற்றும் Flicker Free அம்சங்களும் இதில் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. Qualcomm இன் Snapdragon 6s Generation 3 சிப்செட்டை இந்த Redmi போனில் காணலாம். இதனுடன், 16GB வரையிலான RAM எக்ஸ்டென்ஷனும் இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கலாம்.
Redmi 15 5G கேமரா அமைப்பு
சிறந்த புகைப்படங்களை எடுக்க, இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இதில் 50 MP பிரைமரி கேமராவுடன் 2MP செகண்டரி கேமராவும் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8MP கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர, AI அம்சங்களையும் இந்த போனில் பெறலாம். இதில் AI Erase, Classic Film Filter மற்றும் AI Sky போன்ற பல சிறந்த அம்சங்கள் அடங்கும்.
Redmi 15 5G பேட்டரி மற்றும் சார்ஜிங்
இந்த Redmi ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி உள்ளது. இது 33W வயர்டு சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும். இந்த தொலைபேசியை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால், 23.5 மணிநேரம் YouTube, 55.6 மணிநேரம் Spotify ஸ்ட்ரீமிங் மற்றும் 17.5 மணிநேரம் Instagram ரீல்களைப் பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறுகிறது. இது தவிர, டால்பி ஆடியோ மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64 சான்றிதழும் சாதனத்திற்கு வழங்கப்பட்டிருக்கலாம். கூடிய விரைவில் இந்த ரெட்மி போனின் முழு விவரங்கள் பற்றி தெரியவரும்.
About the Author
Sripriya Sambathkumar
நாட்டின் மீது பற்று, தமிழின் மீது தாகம், இலக்கியத்தில் ஆர்வம், எழுதுவதில் நாட்டம், புத்தகங்கள் மீது பித்து, புதுமையில் விருப்பம், பழமையுடன் நெருக்கம், இசையின் மீது ஈர்ப்பு, பலவித ரசனைகளின் ரசிகை!!
…Read More