சிம்லா,
இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.39 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 32.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.