ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது.
இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார்.
இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸ் ஆகிறது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே செல்வமணி ‘கேப்டன் பிரபாகரன்’ குறித்து பேசியிருக்கிறார். “இந்தப் படம் எடுத்தக் காலக்கட்டத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. CG, ட்ரோன் கேமராவோ என்று எந்த வசதியும் இல்லை.
ஒரு காட்சியில் 2000 பேர் நடிக்க வேண்டும் என்றால், அந்தக் காட்சி எடுப்பதற்காக 2000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். இந்தப் படத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் சிரமப்பட்டிருக்கிறோம்.
விஜயகாந்த் சார், மன்சூர் அலிகான் சார், ரம்யா கிருஷ்ணன், எங்களுடன் பணியாற்றிய டெக்னீஷியன் என எல்லோருமே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து படம் எடுத்தோம் என்று சொல்வார்கள்.
இந்தப் படம் எடுக்கும்போது இரண்டு, மூன்று பேர் உயிரைக்கூட இழந்திருக்கிறார்கள். ஏன் விஜயகாந்த் சார் கூட இரண்டு, மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார்.

இருந்தாலும் எங்கள் அனைவரின் குறிக்கோளும் இந்தப்படம் பிரமாண்டமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 100 நாள் காட்டுக்குள்தான் பயணம் செய்ய வேண்டும்.
ரூம் இருக்காது, கேரவன் இருக்காது, பாத்ரூம் இருக்காது இதெல்லாம் உங்களுக்கு ஓகே என்றால் படம் பண்ணுவோம் என்று விஜயகாந்த் சாரிடம் சொன்னேன். உடனே அவர் நான் ரெடி செல்வமணி என்று சொல்லிவிட்டார்.
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். விஜய்காந்த் சாருக்கு இது 100 -வது படம்.
100-வது படம் எல்லாம் ஓடாது என்று பயமுறுத்தினார்கள். எனக்கு இது இரண்டாவது படம் ஒரே காமினேஷனில் இரண்டாவது படம் எடுத்தால் ஓடாது என்று சொன்னார்கள்.

அதேபோல ரம்யா கிருஷ்ணன் நடித்தால் படமே ஓடாது என்று பயமுறுத்தினார்கள். இப்படி பலத் தடைகளைத் தாண்டித்தான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை எடுத்தோம்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…