வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

சென்னை: வேளாண்​மை, பொதுப்​பணி, நெடுஞ்​சாலைத் துறை​களுக்​காக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாகத் தேர்வு செய்​யப்​பட்ட 379 பேர் மற்​றும் கருணை அடிப்​படை​யில் 33 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை, தலை​மைச்​செயல​கத்​தில் வேளாண்​ துறை சார்​பில், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் வேளாண்மை அலு​வலர், உதவி வேளாண்மை அலு​வலர் ஆகிய பணி​யிடங்​களுக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 169 பேருக்​கும், கருணை அடிப்​படை​யில் இளநிலை உதவி​யாளர், ஆய்வக உதவி​யாளர், தட்​டச்​சர், காவலர் ஆகிய பணி​யிடங்​களுக்கு 33 வாரிசு​தா​ரர்​களுக்​கும் பணி நியமன ஆணை​களை வழங்​கும் அடை​யாள​மாக 10 பேருக்கு நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

அதே​போல், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் மூல​மாக நெடுஞ்​சாலைத் துறை​யில் உதவிப் பொறி​யாளர் பணியிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 45 பேருக்​கும், பொதுப்​பணித்​துறை​யில், உதவிப் பொறி​யாளர் (சி​வில்) மற்​றும் (மின்) ஆகிய பணி​யிடங்​களுக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 165 பேருக்​கும் பணி நியமன ஆணை​களை முதல்​வர் வழங்​கி​னார்.

இந்​நிகழ்வுகளில் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம்​ மற்​றும்​ துறை செயலர்கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.