குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வேட்புமனு தாக்கலுக்கு முன் பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன். இது ஒரு சித்தாந்த போர். இன்றைய நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அது மிகவும் எளிமையானது. தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

தேர்​தல் நடை​முறை​கள்: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. 21-ம் தேதிக்​குள் மனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். மனுக்​கள் பரிசீலனை 22-ம் தேதி நடை​பெறும். வேட்பு மனுக்​களை திரும்ப பெற ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள். ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே தேர்​தலில் வாக்​களிக்க முடி​யும்.

சி.பி.ஆர் வெற்றி பெறுவது உறுதி: தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. இதன்​படி, 391 எம்​.பி.க்​களின் ஆதரவை பெறும்வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார்.

நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும், எதிர்க்கட்சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு பெரும்பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறுதி​யாகி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.