கனிவான, நகைச்சுவை நிறைந்த அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ரோட் தீவில் பிறந்​தவர் பிராங்க் கேப்​ரியோ. பின்​னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்​டு​களாக ரோட் தீவின் முனிசிபல் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​னார். பெரும்​பாலும் போக்​கு​வரத்து விதி​மீறல் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்து தீர்ப்பு வழங்கி வந்​தார்.

ஒரு கட்​டத்​தில் இவரது அணுகு​முறை அனை​வரை​யும் கவர்ந்​தது. போக்​கு​வரத்து விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​வார்​கள். அப்​போது அவர்​களிடம் நீதிபதி பிராங்க் கேப்​ரியோ விசா​ரணை நடத்​தும் விதமே தனித்​து​வ​மாக இருக்​கும்.

நீதி​மன்ற அறை​யில் குற்​ற​வாளி​யாக நிற்​கும் உணர்வு மக்​களுக்கு ஏற்​ப​டாது. நண்​பரிடம் பேசும் உணர்வே அங்கு மேலோங்கி இருக்​கும். போக்​கு​வரத்து விதி​மீறல் குற்​றத்​துக்கு ஆதா​ர​மாக வீடியோ காட்​சிகளை சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு போட்டு காட்​டு​வார்​கள். அதை பார்த்து ஆமாம், தவறு செய்​து​விட்​டேன் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் குற்​றத்தை ஒப்​புக் கொள்​வார்​கள். ஆனால், அவர்​களு​டைய பின்​புலம், எந்​தச் சூழ்​நிலை​யில் அவர்​கள் போக்​கு​வரத்து விதி​மீறலில் ஈடு​பட்​டார் என்​பதை எல்​லாம் கருத்​தில் கொண்டு பல வழக்​கு​களை தள்​ளு​படி செய்​வார்.

நீதிபதி கேப்​ரியோ பல சந்​தர்ப்​பங்​களில் அபராதம் விதித்​துள்​ளார். அந்​தத் தொகையை கூட நன்​கொடை​யாளர்​களிடம் பெற்ற பணத்தை ஈடு​கட்டி தீர்ப்​பளிப்​பார். இவரது நீதி​மன்ற விசா​ரணை​கள், தொலைக்​காட்​சி​யில் ஒளிபரப்​பாகி உலகம் முழு​வதும் பிரபல​மா​யின. ‘Caught in Providence’ என்ற பெயரில் நீதி​மன்ற விசா​ரணை​கள் ஒளிபரப்​பா​யின. கேப்​ரியோ​வின் நீதி​மன்ற விசா​ரணை​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகின. உலகிலேயே மிகக் கனி​வான நீதிபதி என்று பாராட்​டு​களைப் பெற்​றார்.

இந்​நிலை​யில், தனக்கு கணை​யப் புற்​று​நோய் பாதிப்பு இருப்​ப​தாக நீதிபதி பிராங்க் கேப்​ரியோ கடந்த 2023-ம் ஆண்டு தெரி​வித்​தார். அந்த செய்​தியை கேட்டு கோடிக்​கணக்​கான ரசிகர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். ஏராள​மானோர் அவருக்​காக பிரார்த்​தனை செய்​தனர். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி நீதிபதி பிராங்க் கேப்​ரியோ கால​மான​ார். அவருக்கு வயது 88.

இதுகுறித்து பிராங்க் கேப்​ரியோ​வின் மகன் டேவிட் கேப்​ரியோ அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​துள்​ளார். தனது தந்​தைக்கு ஆதர​வும், பா​ராட்​டும் வழங்​கிய அனை​வரும் அவரது நினை​வாக கருணை​யை சிறிதளவேனும்​ உலகில்​ பரப்​ப வேண்​டும்​ என்​று வேண்​டு​கோள்​ விடுத்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.