​நாய் அசுத்​தம் செய்த உணவை சாப்​பிட்ட 84 மாணவர்களுக்கு ரூ.25,000: சத்​தீஸ்​கர் அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தரவு

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

விவரம் அறிந்த பின்​னர் அந்த மாணவர்​களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்​பூசியை செலுத்த மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டது. இதனிடையே இந்த விவ​காரத்​தை அரசின் கவனக்​குறைவு என்று கூறி சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றம் தாமாகவே முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

மனுவை வி​சா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: நாய் அசுத்​தம் செய்த உணவைச் சாப்​பிட்ட மாணவர்​கள் 84 பேருக்​கும் அடுத்த ஒரு மாதத்​துக்​குள் தலா ரூ.25 ஆயிரத்தை சத்​தீஸ்​கர் மாநில அரசு வழங்​கவேண்​டும். மதிய உணவு சாப்​பிடும் மாணவர்​களுக்கு தரமான உணவை வழங்​கு​வ​தில் இனி மாநில அரசு கண்​காணிப்​புடன் நடந்​து​கொள்​ளவேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.