பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேச்சு: உக்ரைன், காசா போர் குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: பி​ரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார்.

உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான் உட்பட ஐரோப்​பிய தலை​வர்​கள் உடன் இருந்​தனர்.

இந்த சூழலில் பிரான்ஸ் அதிபர் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று முன்​தினம் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது உக்​ரைன் போர் மற்​றும் காசா போர் குறித்து இரு தலை​வர்​களும் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, ஐரோப்​பா, உக்​ரைன் தலை​வர்​களுக்கு இடையே அண்​மை​யில் நடை​பெற்ற சந்​திப்பு குறித்த தகவல்​களை அதிபர் மெக்​ரான் பகிர்ந்து கொண்​டார். மேலும் காசா​வின் நிலைமை குறித்​தும் அவர் எடுத்​துரைத்​தார். போர்​களுக்கு முற்​றுப்​புள்ளி வேண்​டும். உக்​ரைன், காசா​வில் அமைதி திரும்ப வேண்​டும் என்ற இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை அதிபர் மெக்​ரானிடம் எடுத்​துரைத்​தேன்.

வர்த்​தகம், பாது​காப்​பு, சிவில் அணுசக்தி ஒப்​பந்​தம், தொழில்​நுட்​பம், எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் இந்​தி​யா, பிரான்ஸ் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. இந்​தியா மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துக்கு இடையே விரை​வில் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக அதிபர் மெக்​ரான் முழு ஆதரவு அளித்​தார். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரான்ஸ் அதிபர் மெக்​ரான் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா, பிரான்ஸ் இடையே வர்த்​தக, பாது​காப்பு உறவு வலு​வடைந்து வரு​கிறது. ஜி7 கூட்​டமைப்​புக்கு பிரான்ஸ் தலைமை ஏற்க உள்​ளது. இதே​போல பிரிக்ஸ் கூட்​டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்க உள்​ளது. இதுதொடர்​பாக இரு​வரும் வாழ்த்​துகளை பரி​மாறிக் கொண்​டோம்’’ என்று தெரி​வித்​தார்.

கடந்த 1974 மற்​றும் 1998-ம் ஆண்​டு​களில் அணு குண்டு சோதனையை இந்​தியா நடத்​தி​யது. இந்த காலக்​கட்​டங்​களில் இந்​தியா மீது அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடு​களும் பல்​வேறு பொருளா​தார தடைகளை விதித்​தன. ஆனால் பிரான்ஸ் மட்​டும் இந்​தி​யா​வுடன் நட்​புறவை வளர்த்​தது. தற்​போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​திய பொருட்​கள் மீது 50 சதவீத வரியை விதித்​துள்​ளார். எனினும் பிரான்​ஸ் அதிபர்​ மெக்​ரான்​ வழக்​கம்​போல இந்​தி​யா​வுடன்​ நட்​புறவைப்​ பேணி வருகிறார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.