மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்டத்தில் மணல் கடத்​தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்​வாக அலு​வலரை வீடு புகுந்​து, மணல் கடத்​தல் காரர்கள் தாக்​கிய​தாக வெளிவந்​துள்ள செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

நேர்​மையாக பணியாற்​றிய அதி​காரியை தாக்​கியதுடன், இதற்கு மேலும் கடத்​தலைத் தடுக்க முயற்​சித்​தால் வண்​டியை ஏற்​றிக் கொலைசெய்​து​விடு​வ​தாக மணல் கடத்​தல் கும்​பல் மிரட்​டி​யுள்​ளது.

2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர், ‘தி​முக ஆட்சி அமைந்​ததும் மணல் அள்​ளலாம்’ என அச்​சா​ரமிட்​டதை ஒப்​பிட்​டுப் பார்த்​தால் தொடர்ந்து மணல் கடத்​தல் மாஃபி​யாக்​களுக்கு திரா​விட மாடல் அரசே ஒத்​துழைப்பு தரு​கிறதோ என்ற சந்​தேகம் எழுகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.