சென்னை: ஆகஸ்டு 22ந்தேதியுடன் பணிக்காலம் முடிவடைந்த மனோன்மணீயம் சுந்தரனாா் , அழக்கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இருந்து வருகிறது. ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் காரணமாக, துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் […]
