ம.பி. கிராமத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல் நடமாட்டம்: ரகசிய போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

போபால்: மத்​தி​யப் பிரதேசத்​தில் போபால் அருகே உள்​ளது ஜெக​திஸ்​புரா என்ற கிராமம். மக்​கள் குறை​வாக வசிக்​கும் இந்த கிராமத்​தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்​தது. இது எப்​போதும் மூடப்​பட்ட நிலை​யிலேயே இருந்​தது.

ரகசிய தகவலின் அடிப்படை யில், வரு​வாய் புல​னாய்​வுத்​துறை இயக்​குநரகம் கடந்த 16-ம் தேதி அந்த வீட்டில் சோதனை நடத்​தி​யது. அங்கு 61 கிலோ திரவ மெபட்​ரோன் என்ற போதைப் பொருள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதன் மதிப்பு ரூ.92 கோடி. இது போதைப் பொருட்​கள் விற்​கப்​படும் தெருக்​களில் ‘மி​யாவ் – மியாவ்’ என்ற ரகசிய குறி​யீட்டு பெயரில் விற்​பனை செய்​யப்​படு​கிறது. மேலும், போதை மாத்​திரைகள் தயாரிப்​ப​தற்​கான ரசாயனப் பொருட்​கள் 541 கிலோ இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இங்கு போதைப் பொருள் தயாரித்து நாடு முழு​வதும் கடத்​து​வதற்கு மும்பை தாதா தாவூத் இப்​ராஹிம், அவனது கூட்​டாளி​கள் சலிம் ‘டோலா’ இஸ்​மா​யில், மற்​றும் உமைத் – உர் -ரகு​மான் போன்​றவர்​கள் பாகிஸ்​தான் மற்​றும் துபாயி​லிருந்து பணம் அனுப்​புவ​தாக வரு​வாய் புல​னாய்​வுத்​துறை​யினர் நம்​பு​கின்​றனர். போதைப் பொருள் கடத்​தல்​காரர் இக்​பால் மிர்​சி​யின் கூட்​டாளி​யாக இருந்த சலிம் டோலா, துருக்​கியி​லிருந்து மும்பை மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள தாவூத் கும்​பலில் பணி​யாற்​றியவர்​கள்

மூல​மாக இந்த போதைப் பொருள் தொழிலை நடத்தி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. ஜெகதீஸ்​புரா கிராமத்​தில் உள்ள போதைப் பொருள் தொழிற்​சாலையை பைசல் குரேஷி என்​பவர் நடத்தி வரு​கிறார். மருந்து தயாரிப்பு துறை​யில் டிப்​ளமோ முடித்​துள்ள இவர் குஜ​ராத்​தைச் சேர்ந்​தவர். இவரது கூட்​டாளி ரசாக் கான்.

ஒரே சோதனை​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டிருந்​தா​லும், இது பனிப்​பாறை​யின் நுனி போன்​றது​தான் என கூறும் புல​னாய்வு அதி​காரி​கள், இந்த தொழில் இன்​னும் பல இடங்​களில் நடை​பெறலாம் என சந்​தேகிக்​கின்​றனர். இதையடுத்து இதன் நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.