மதராஸி இசைவெளியீட்டு விழா: "முருகதாஸ் சார்தான் அஜித் சாருக்கு தல-னு பெயர் வச்சாரு" – சூப்பர் சுப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.

மதராஸி
மதராஸி

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “மதராஸி மாபெரும் வெற்றி படமாக வருவது உறுதி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கதாநாயகன் சிவகார்த்திகேயன். இந்தப் படம் அவருக்கு உச்சம். நான் தயாரித்த துப்பாக்கி படத்தை வெற்றி படமாக எனக்கு தந்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இவர்கள் இருவரும் இணைந்ததில் நான் பாலமாக இருந்ததை எண்ணி உள்ளம் மகிழ்கிறேன். அனிருத்தும் மாபெரும் இசையை கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

அதேபோல் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, “நான் எப்போதுமே என்னுடைய முதல் நன்றியை அனிருத் ப்ரோவுக்குதான் சொல்வேன்.

தலைவர் பற்றி நான் மாஸ் பாடல் தொடர்ந்து எழுதின சமயத்துல நம்ம வேற மாதிரியான பாடல்களும் எழுதுவோம்னு எழுத வச்சாரு.

சளம்பல பாடல்ல சிவா அண்ணன் டேன்ஸ்ல பிச்சுட்டாரு” என்று கூறியவர் அடுத்து முருகதாஸ், சிவகார்த்திகேயன், அனிருத், ருக்மினி ஆகியோரைப் பற்றி ஹைக்கூ ஸ்டைலில் கூறுகையில், “முருகதாஸ்: என்னைக்கும் நீதான் தல. முருகதாஸ் சார்தான் அஜித் சாருக்கு தலனு பெயர் வச்சாரு.

முருகதாஸ்
முருகதாஸ்

அனிருத்: பார்க்கிறதுக்கு அமைதியாக இருப்பாப்ல ஆனா, banger!

ருக்மினி: பெங்களூரு அனுப்பின தரமான கிப்ட்ல தலைவருக்கு அப்பறம் நீ!

சிவகார்த்திகேயன்: ஒரே ஒரு நல்லவன் ஜெயிச்சா அது ஜெயிக்காத பல கோடி பேருக்கு பலம்!” என்று சூப்பர் சுப்பு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.