மதுரையில் குப்பை தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில், வீடு​களில் சேரும் குப்​பையை மட்​டும் கொட்ட வேண்​டும். தனி​யார் மற்​றும் அரசுமருத்​து​வ​மனை​களின் மருத்​து​வக் கழி​வு​களை பாது​காப்​பான முறை​யில் தரம் பிரித்​து, அவர்​களிடம் வந்து சேகரிக்​கும் ஒப்​பந்த நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும்.

ஆனால், கடந்த காலத்​தில் வைகை ஆறு, கால்​வாய்​களில் மருத்​து​வக் கழி​வு​களை தனி​யார் மருத்​து​வ​மனைகளின் நிர்​வாகத்​தினர் கொட்​டினர். ஆணை​யர் சித்ரா அதிரடி நடவடிக்கை எடுத்​து, தனி​யார் மருத்​து​வ​மனை​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்ட பிறகு, ஓரளவு இது​போன்று மருத்​து​வக் கழி​வு​கள் கொட்​டப்படு​வது தடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மதுரை மாநக​ராட்சி 35-வது வார்​டில் உள்ள செண்​பகத் தோட்​டம் பகு​தி​யில் உள்ள குப்​பைத் தொட்​டிகளில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​கள் கொட்​டப்​பட்​டிருந்​தன. இதுகுறித்து அப்​பகுதி சுகா​தார ஆய்​வாளர், மாநக​ராட்சி நகர் நல அலு​வலர் இந்​தி​ரா​வுக்கு தகவல் தெரி​வித்​தார். அவர் விசா​ரணை மேற்​கொண்​டு,சம்​பந்​தப்​பட்ட தனியார் மருத்​து​வ​மனை நிர்​வாகத்​தைக் கண்​டறிந்து ரூ.1 லட்​சம் அபராதம் விதிக்க உத்​தர​விட்​டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.