மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்பு – சென்னை கண்ணகி நகரில் நடந்தது என்ன?

சென்னை கண்ணகி நகரில் சாலையில் தேங்கிய மழைநீரில் கால் வைத்த பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் வரலட்சுமி (30). அப்பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணி யாற்றி வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்து தூய்மைப் பணிக்காக புறப்பட்டு சென்றுள்ளார். கண்ணகி நகர் 11-வது குறுக்குத் தெருவில் சென்ற போது, சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்ததும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ‘மின்பெட்டியில் இருந்து செல்லும் மின்சார வயரை பல அடி ஆழத்துக்கு புதைக் காமல், மேலோட்டமாக பதிக்கின்றனர். இதனால், சாலையில் தேங் கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட் டுள்ளது. ஆங்காங்கே மின்சார பெட்டியில் வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளன. மின் வாரியத்துக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

அப்பகுதியில் உள்ள மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணகி நகர் போலீஸார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் ரவி, பெயின்டராக வேலை செய்கிறார். இவர்களுக்கு யுவ ஸ்ரீ (10), மணி (8) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வரலட்சுமி குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் உர்பேசர் சுமீத் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் கணவர் ரவியிடம் ரூ.20 ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அவர் சிறிய அளவிலான உடல் பாதிப்பு உள்ளவர். அவருக்கான சிகிச்சையை தமிழக அரசு ஏற்கும். அவருக்கு உர்பேசர் நிறுவனத்தில் கண்காணிப்பாளர் போன்ற இலகுவான வேலை வழங்க நிர் வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

பள்ளியில் படித்து வரும் அவர்களது இரு குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவை சென்னை தெற்கு மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக ஏற்கும். இப்பகு தியில் மின் இணைப்பு தொடர் பான குறைகள் சரிசெய்யப்படும்” என்றார்.

வரலட்சுமியின் உடலுக்கு தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அன்புமணி வலியுறுத்தல்: இந்நிலையில், ‘உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கான இழப்பீட்டை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேயர், நகராட்சி நிர்வாகத் துறை, மின்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரின் அலட்சியம் காரணம் என்பதால், இழப்பீட்டு தொகையை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.