மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தம்

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 10,850 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​வரத்து சரிந்த நிலை​யில் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது. கடந்த 6 நாட்​களுக்கு பிறகு உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது தற்​போது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்​து, காவிரி டெல்டா பாசனத்​துக்கு மட்​டும் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று மாலை முதல் தண்​ணீர் திறப்பு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அதே​போல், உபரிநீர் திட்​டத்​தில் ஏரி​களுக்​கும் தண்​ணீர் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது, அணை​யின் நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் நீடிக்​கிறது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி அளவீட்​டின்​போது விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி​யாக​வும், மாலை 18 ஆயிரம் கனஅடி​யாக​வும் பதி​வான நீர்​வரத்து நேற்று காலை 6 மணி​யள​வில் 14 ஆயிரம் கனஅடி​யாக​வும், பகல் 2 மணி​யள​வில் 9,500 கனஅடி​யாக​வும் சரிவடைந்​தது. கர்​நாடக மாநிலத்​தில் உள்ள அணை​களில் இருந்து காவிரி​யில் திறந்து விடப்​படும் உபரி நீரின் அளவு குறைக்​கப்​பட்​ட​தால், ஒகேனக்​கல் காவிரி​யிலும் படிப்​படி​யாக நீர்​வரத்து குறைந்து வரு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.