சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த மருந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். கொசு மூலம் பரவும் சிக்கன்குனியா வைரசுக்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் Ixchiq-க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட […]
