பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 2 பாகிஸ்தான் பெண்களின் பெயர்: விசாரணைக்கு மத்திய உள்துறை உத்தரவு

பகல்பூர்: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் பாகிஸ்​தானியர்​கள் 2 பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. பாகிஸ்​தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்கு வந்த பாகிஸ்​தான் பெண்​கள் 2 பேருக்கு வாக்​காளர் அடை​யாள அட்டை வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், சமீபத்​தில் பிஹாரில் மேற்​கொண்ட தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​யின் போதும், அவர்​கள் இரு​வரின் வாக்​காளர் அட்​டைகள் சரி​பார்க்​கப்​பட்​டுள்​ளன.

மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் உத்​தர​வின் பேரில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் இவர்​கள் பாகிஸ்​தானியர்​கள் என்று தெரிந்​துள்​ளது. மேலும், தற்​போது அவர்​கள் வயது மூத்​தவர்​களாக இருப்​ப​தா​லும், வாக்​காளர் தீவிர திருத்​தப் பணி​களின் போது அவர்​களால் சரியான தகவல்​களை அளிக்க முடிய​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர்​கள் இரு​வரின் பெயர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பகல்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் நவல் கிஷோர் சவுத்ரி கூறும்​போது, ‘‘மத்​திய உள்​துறை அமைச்​சகத்​திடம் இருந்து எங்​களுக்கு கிடைத்த சில தகவல்​களை சரி பார்த்த போது, அந்த 2 பேரும் பாகிஸ்​தானியர்​கள் என்​பது உறு​தி​யானது. அதன்​பிறகு அவர்​களு​டைய பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

பிஹார் மாநில பகல்​பூர் மாவட்​டம் டேங்க் லேன் பகு​தி​யில் இப்​துல் ஹாசன் என்​பவரின் மனைவி இம்​ரானா கானம் (எ) இம்​ரானா காதூன், முகமது தப்​ஜீல் அகமது என்​பவரின் மனைவி பிர்​தோசியா கானம் ஆகிய பெயர்​களில் வாக்​காளர் அட்​டைகள் பெறப்பட்டுள்​ளன. இந்த 2 பெண்​களில் ஒரு​வர் 3 மாத விசா​விலும் மற்​றொரு​வர் 3 ஆண்டு வி​சா​விலும் கடந்த 1956-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இந்​தியா வந்​துள்​ளனர். அவர்​கள்​ இரு​வருக்​கும்​ தற்​போது நோட்​டீஸ்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.