போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்: சிஐடியு தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் தொடரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம் (சிஐடி​யு) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முந்தைய அதி​முக ஆட்​சி​யின்​போது, போக்​கு​வரத்​துக் கழகங்​களை சிறப்​பாக நடத்​து​வதற்​கான சில ஆலோசனை​களை திமுக சார்​பில் அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வர் ஸ்டா​லின் முதல்​வர் பழனி​சாமி​யிடன் வழங்​கி​னார்.

இவ்​வாறு திமுக வழங்​கிய ஆலோசனை​களைக் கூட இந்த அரசு பரிசீலனைக்கு எடுத்​துக் கொள்​ள​வில்​லை. தேர்​தல் வாக்​குறு​தி​யை​யும் நிறைவேற்​ற​வில்​லை. தொழிலா​ளர்​களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை போக்​கு​வரத்​துக் கழக நிர்​வாகங்​கள் செலவு செய்​து​விட்​டன. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஏற்​படும் இழப்பை ஈடு​கட்ட 20 ஆண்​டு​களாக அரசு எவ்​வித நிதி​யுத​வி​யும் அளிக்​க​வில்​லை. ரூ.100 வசூலா​னால் ரூ.13 வங்​கிக் கடனுக்கு வட்​டி​யாக செலுத்​தப்​படு​கிறது.

இதைப்போல் கடந்த 10 ஆண்​டு​களாக நீடிக்​கும் போக்​கு​வரத்து ஊழியர்​கள் பிரச்​சினைக்கு தீர்வு காண அரசு முன்​வர​வில்​லை.
இந்த நிலை​யில் உள்ள போக்​கு​வரத்​துக் கழகங்​களை ஒழுங்​குபடுத்​து​வதற்கு மாறாக மற்ற மாநிலங்​களில் அரசு போக்​கு​வரத்து நிறு​வனங்​களை அழி​வுக்​குக் கொண்டு சென்று தோற்​றுப் போன திட்​டங்​களை தமிழகத்​தில் அமல்​படுத்த திமுக அரசு ஓராண்​டாக முயற்​சித்து வரு​கிறது.

போக்​கு​வரத்​துக் கழகங்​களை பாது​காக்​க​வும், பணி​யில் உள்ள ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களின் பிரச்​சினைக்கு தீர்வு காண​வும் அரசு முன்வர வேண்​டும் என்​பதே சிஐடி​யு​வின் வேண்​டு​கோள். இந்த கோரிக்​கையை முன்​வைத்து கடந்த 18-ம் தேதி முதல் தொடர் காத்​திருப்பு போ​ராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. பிரச்​சினை​களுக்கு அரசு தீர்வு காணும் வரை காத்​திருப்பு
போ​ராட்​டம் தொடரும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.