பாரீஸ்,
பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முயன்றது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சிறிதுநேரம் வட்டமடித்து, பின்னர் ஏரிக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தண்ணீரை சேகரிக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியில் உள்ள தண்ணீர் மீது உரசியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.