சென்னை: நாளை மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்) சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை […]
