குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.

இஸ்ரோ சார்​பில் நாட்​டின் 2-வது ராக்​கெட் ஏவுதளம் தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினத்​தில் அமைக்​கப்​படு​கிறது. இங்கு 2,292 ஏக்​கர் பரப்​பில் ரூ.986 கோடி​யில் ராக்​கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி கடந்த 2024 பிப். 28-ல் அடிக்​கல் நாட்​டி​னார். தொடர்ந்​து, குலசேகரன்​பட்​டினத்​தில் பல்​வேறு கட்​டமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்​நிலை​யில் ரூ.100 கோடி​யில் ராக்​கெட் லாஞ்ச் பேட் எனப்​படும் ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான பூமி பூஜை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் க.இளம்​பகவத் தலைமை வகித்​தார். ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான பணி​களை தொடங்​கி​வைத்த இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குலசேகரன்​பட்​டினம் ராக்​கெட் ஏவுதளத்​தில் இருந்து ஆண்​டுக்கு 25-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​கோள்​கள் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இஸ்​ரோவுக்கு ஆந்​திரா மாநிலம் ஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி ஆய்வு மையத்​தில் மட்​டுமே ராக்​கெட் ஏவுதளம் அமைந்​துள்​ளது.

அங்​கிருந்து நமது செயற்​கைக்​கோள்​கள் மற்​றும் பல்​வேறு உலகநாடு​களின் செயற்​கைக்​கோள்​கள் ஏவப்​பட்டு வரு​கின்​றன. பிஎஸ்​எல்வி, ஜிஎஸ்​எல்வி போன்ற ராக்​கெட்​டு​களின் உதவியோடு பல செயற்​கைக்​கோள்​கள் இங்​கிருந்து விண்​ணில் ஏவப்​படு​கின்றன. தற்​போது, நாட்​டின் 2-வது ஏவுதளத்தை அமைக்​கும் பணி​யில் இஸ்ரோ ஈடு​பட்​டிருக்​கிறது. அதற்​காக, தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உள்ள குலசேகரன்​பட்​டினம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இங்கு ராக்​கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறைவடைந்​து, கடந்த ஆண்டு பிப்​ர​வரிமாதம் பிரதமர் நரேந்​திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

கடந்த 6 மாதங்​களாக ராக்​கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்​தில் உட்​கட்​டமைப்பு பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா தற்​போது நடை​பெற்​றுள்​ளது. தற்​போது ரூ.100 கோடி​யில் முக்​கிய​மாக 33 கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அடுத்த ஆண்டு நவம்​பர் மாதத்​தில் குலசேகரன்​பட்​டினத்​தில் இருந்து ராக்​கெட் ஏவப்​படும்.

இதற்​கான இடம் வழங்​கிய தமிழக அரசுக்​கும், தமிழக முதல்​வருக்​கும் நன்​றி. அடுத்த 3 மாத காலத்​துக்​குள் சிறிய ரக ராக்​கெட் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அடுத்த ஆண்டு இங்​கிருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்​கெட் விண்​ணில் ஏவப்​படும். தனி​யார் ராக்​கெட்​டு​களும் இங்​கிருந்து ஏவப்​படும். அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதத்துக்குள் அனைத்து பணி​களும் நிறைவடை​யும். குலசேகரன்​பட்​டினம் இந்​திய வரைபடத்​தில் முக்​கிய இடத்தை பிடித்​துள்​ளது. இங்​கிருந்து ஆண்​டுக்கு 25 ராக்​கெட்​கள் வரை ஏவ திட்ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

நிகழ்ச்​சி​யில், ஸ்ரீஹரி​கோட்டா சதீஷ் தவன் விண்​வெளி மைய இயக்​குநர்​கள் ராஜ​ராஜன், பத்​மகு​மார், மகேந்​திரகிரி இஸ்ரோ உந்​து​விசை வளாக இயக்​குநர் ஆசீர் பாக்​கிய​ராஜ், குலசேகரன்​பட்​டினம் ராக்​கெட் ஏவுதள திட்ட இயக்​குநர் சரவண பெரு​மாள்,எஸ்​.பி. ஆல்​பர்ட் ஜான், மாவட்ட வன அலு​வலர் ரேவதி ரமன், திருச்​செந்​தூர் டிஎஸ்​பி மகேஷ்கு​மார்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.